ஆரோக்கியம் என்னுடையது

உணவு அது எனக்கான தேவை

ஆரோக்கியம் அது‌ எனக்கான அவசியம்

எத்தனை முறை சாப்பிடுகிறோம் என்பதில் இல்லை

எப்படி பட்டதை சாப்பிடுகிறோம் என்பது எதார்த்தம்

ஆரோக்கியம் உன் தேடல் ஆனால்

உணவே உனக்கான மருந்தாகும்

முறைப்படி சாப்பிட வேண்டும்

முறையாக சாப்பிட வேண்டும்

முழுமையாக சாப்பிட வேண்டும்

முறு முறுப்பில்லாமல் சாப்பிட வேண்டும்

உண்பதின் முழுமை பசியில் இருக்கிறது

உண்ட பின்பும் பசிக்க வேண்டும்

உறங்கி எழுந்த பின்பும் பசிக்க வேண்டும்

பசிக்கும் தன்மை உண்டு

புசிப்புக்கும் தன்மை உண்டு

உன் நன்மை நாடி,தேவைக்கு புசி

வாழ்வின் நலம் நாடி, நன்றாய் புசி

மறவாமல் புசி, விரும்பி புசி

நோய்நொடி குறைத்து ஆரோக்கியத்தை சொந்தமாக்கு.

 

M. Vasanth David Benaya
System Administrator-EDP

Kauvery Hospital