ஆதலால் அன்பு செய்வீர்

ஏதோ ஒன்றில் காதல் பித்து தலைக்கேராதோர் வாழாதவரே.
மழலையரின் சொல்லிலும், குழந்தைகளின் உற்சாகத்திலும்,
கன்னியரின் கடைக்கண் பார்வையிலும், இளைஞர்களின் வசீகரித்திலும்,
மத்திம வயதினரின் அச்சத்துடன் கூடிய அக்கறையிலும்,
முதியவரின் கள்ளமற்ற கருணையிலும் இப்புவியே காதல் கொள்க.
அதிகலியுக பாரதி

march_poetry_corner_2019
velmurugan-deisingh

Dr. Velmurugan Deisingh,
Consultant Anaesthesiologist


போராடும் பெண்

பெண் என்றால் வீட்டின் விளக்கு,
பெண் என்றால் குடும்பத்தின் ஒற்றுமை காப்பிடல்,
பெண் என்றால் அன்பு, அரவணைப்பு, முயற்ச்சி, போராட்டத்தின் பின் வெற்றி,
பெண் என்றால் தீமைக்கு எதிர்ப்பு, அவமறியாதையை கண்டால் கோபம்,
எல்லாம் தெரிந்த மக்களே
இந்தப் பெண் பிறந்தால் சிலர் முகத்தில் மகிழ்ச்சி,
பலர் முகத்தில் கண்ணீர்,
மருத்துவர் பெண் குழந்தையை கரத்தில் கொடுக்கும்
பொழுது அதிக கண்ணீர் விடுவது
ஆணைவிட பெண்தான்.
ஏன்! ஏன்!! ஏன்?
இதைப் பார்க்கும், கேட்கும் பெண்களின்
இரத்தம் கொந்தளிக்க, இதயம் துடிதுடிக்க நாம்
எடுக்கும் சபதம்

என்று அனைத்து பெண்களுக்கும் கல்வி கிடைக்கும் நாள்,
என்று பெண்ணை சமமான மரியாதையுடன் நடத்தப்படும் நாள்,
என்று தாய் ஆணும், பெண்ணும் சமம் என்று நினைக்கும் நாள்,
என்று தாய் தன் தலையை நிமிர்ந்து என் பெண் வெற்றியடைந்தால் என்று கூறும் நாள்,
என்று தாய் எனக்குப் பிறக்கப் போவது ஆணா! பெண்ணா என்று கேட்காத நாள்,
ஒவ்வொரு நாளும் பெண் இருந்தால் தான் இந்த உலகம் இருக்கும் என்று அறியும் நாள்
அன்று கொண்டாடுவோம் சர்வதேச பெண்கள் தின நாள்
அன்று ஒரு நாள் மட்டும் இல்லாமல் என்றென்றும்

march_poetry_corner_2_2019
dr-sabeeha-poetry

Dr. Sabeeha T.S., DNB, OBG,
Consultant Obstetrician and Gynaecologist

Kauvery Hospital