மறதி முதல் கீழே விழுதல் வரை சீனியர் சிட்டிசன்களின் வாழ்வினிலே…

மறதி முதல் கீழே விழுதல் வரை சீனியர் சிட்டிசன்களின் வாழ்வினிலே…
June 07 13:33 2024 Print This Article

தொழில்மயமாக்கல் மற்றும் மருத்துவத் துறையில் ஒரே நேரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக அனைத்து நாடுகளிலும் ஆயுட்காலம் அதிகரித்து வருகிறது. முந்தைய காலத்தில் பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் மூத்த குடிமக்களின் என்ணிக்கை 10 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக இரட்டிப்பாவதற்கு 150 ஆண்டுகள் தேவைப்பட்டன. இப்போதோ இந்தியா போன்ற குறைந்த வருமானமுள்ள நாடுகளிலும்கூட மூத்தோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதே போக்கில் சென்றால், 2050ம் ஆண்டில் நாம் சந்திக்கும் ஐந்து நபர்களில் ஒருவர் 60 வயதைத் தாண்டியவராகவே இருப்பார்.

நாம் சொல்வதுண்டு… ‘அந்தக் காலத்தில் எங்கள் தாத்தா, பாட்டி எல்லோரும் அவ்வளவு ஆரோக்கியமாக இருந்தார்கள்’ என்று. ஆனால், மூத்த குடிமக்களின் உடல்நலம் என்பது ஜீன் மட்டுமே சார்ந்ததல்ல. உணவுப்பழக்கம், உடல் பருமன், உடல் செயல் பாடு, புகைப் பழக்கம், மது அருந்துதல், சுற்றுச்சூழல் மாசுபாடுகள், உளவியல் மன அழுத்தம் மற்றும் இரவு நேர வேலைகள் போன்ற எபிஜெனெடிக் முறைகளை மாற்றியமைக்கக்கூடிய பல வாழ்க்கை முறை காரணிகள் உடல் நலத்தோடு தொடர்புடையவை. இவையெல்லாம் பிற்காலத்தில் மூப்புப் பருவத்தின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கின்றன.

முதியவர்களுக்கு ஏற்படும் சில முக்கியமான குறைபாடுகள்…

  • பார்வைக் குறைபாடு… வயோதிகம் காரணமாகப் பரவலாக ஏற்படும் பிரச்னை இது. காட்ராக்ட், க்ளுக்கோமா போன்ற பார்வை பிரச்னைகளைச் சிகிச்சைகள்மூலம் சரி செய்துவிடலாம். அதன் பிறகு தினசரி நடவடிக்கைகளில் வழக்கம்போல ஈடுபடலாம்.
  • செவிக் குறைபாடு… இதுவே முதியோர் மத்தியில் பரவலாகக் காணப்படுகிறது. காது கேளாமை பிரச்னை இருந்தாலும், பெரும்பாலான முதியோர்களுக்கு ஹியரிங் எய்ட் மூலம் நிவர்த்தி செய்ய முடியும். காது கேளாமையை சரிசெய்வதன் மூலமே டிமென்சியா, நினைவாற்றல் இழப்பு, அறிவாற்றல் குறைபாடு போன்றவை ஏற்படாமல் தடுக்க 15 சதவிகிதம் வாய்ப்புள்ளது. அதோடு, தகவல்தொடர்பில் இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்ளவும், சமூக நடவடிக்கைகளில் தயக்கமின்றி ஈடுபடவும் முடியும். முக்கியமாகத் தனிமையாகத் தவிர்க்கலாம். நடமாடுவதிலும் பிரச்னை இருக்காது.
  • முதியவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளில் ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோராசிஸ் ஆகியவையும் இடம்பெறுகின்றன. ஆர்த்ரிடிஸ் என்பது மூட்டில்தான் ஏற்படும் என்று நினைக்கிறோம். ஆனால், இது தோள்பட்டை, இடுப்பு, முதுகெலும்புப் பகுதியிலும் ஏற்படலாம். ஆஸ்டியோபோராசிஸ் என்பது எலும்பின் அடர்த்தி குறைவதால் உண்டாகிறது. உடல் பருமனைத் தவிர்த்து, உடற்பயிற்சிகளை வழக்கமாக மேற்கொண்டாலே இது போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். வலியைக் குறைக்க மருத்துவரின் ஆலோசனை பெற்று வலிநிவாரணிகளை எடுத்துக் கொள்ளலாம்.சிலருக்கு ஹார்மோன் தெரபி
  • பரிந்துரைக்கப்படலாம்.
  • கீழே விழுதல் என்பது வயதாவதால் மட்டும் ஏற்படும் பிரச்னை அல்ல. இதற்கு இன்னும் பல காரணிகளும் உண்டு. உலகி ல் மூன்றில் ஒரு முதியவர் கீழே
  • விழுவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் நான்கி ல் ஒருவர் இப்படி விழுகிறார். 80 வயது தாண்டிய இருவரில் ஒருவர் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது கீழே விழுந்து பிரச்னையைச் சந்திக்கிறார். இதற்கு அவர் எடுத்துக்கொள்ளும் பலவித மருந்துகள், மேற்கொண்ட அறுவைசிகிச்சைகள், உடலிய ல் குறைபாடுகள், ஆர்த்ரிடிஸ், சுற்றுச்சூழல் காரணிகள், உடற்பயிற்சியின்மை, உபகரணங்களைப் பயன்படுத்தாமை போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.
  • முதியவர்கள் சந்திக்கும் மற்றுமொரு பிரச்னை சிறுநீர் கசிவை கட்டுப்படுத்த முடியாமை. இந்தப் பிரச்னை சமூகத்தோடு ஓட்டாமல் அவர்களைத் தடுக்கிறது. ஆண்களுக்கு புரோஸ்டேட் விரிவடைவது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மருந்துகள், நடமாட்டம் இல்லாமல் இருப்பதும் காரணமாகலாம். டிமென்சியா போன்ற பிரச்னைகளாலும் இது ஏற்படலாம். பெண்களின் தொடச்சியான குழந்தைப்பேறு, வயிற்றுத் தசை பலவீனம் போன்றவை அவர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படக் காரணமாக உள்ளன. சிலருக்கு மன அழுத்தமும் இதற்கான காரணமாகலாம்.
  • அறிவாற்றல் திறன் குறைவு மற்றும் டிமென்சியா… இது முதியோர்களின் பெரிய சிக்கல். வயதாவதால் ஏற்படுகிறது என்பதைவிட, மூளையின் வயோதிகத்தைப் பொறுத்தே இந்தப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
  • ஓரளவு மறதி, சில வார்த்தைகளை மறத்தல் போன்றவை ஒகேதான். வாகனங்களை இயக்குதல் போன்றவற்றில் இவர்களுக்கு சிரமங்கள் இருக்கக்கூடும். ஆனால், மறதி காரணமாக சிறுநீரைக் கட்டுப்படுத்த இயலாமை, சமூகத்திலிருந்து விலகியே இருத்தல், பணி, தொழில் சார்ந்த இழப்புகள், எல்லாவற்றுக்கும் பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை, தினசரி செயல்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்த்தல், தனிமையாக இருத்தல் போன்றவை ஏற்படுமானால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். 65-70 வயதுடையோர் மத்தியில் மனச்சோர்வு பிரச்னைகள் பரவலாக உள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் இந்தப் பிரச்னை குறைவாகவே உள்ளது.
  • நிதிப்பற்றாக்குறை, பிறரைச் சார்ந்திருக்கும் நிலை, தனிமை போன்ற பின்னணியில் பலர் கவலை மற்றும் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். இந்த பிரச்னைக்கு அவர்கள் உரிய சிகிச்சை பெறுவதில்லை. பல நேரங்களில் இவை தூக்கமின்மை பிரச்னையாகவே கருதப்பட்டு, தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்வது தொடர்கிறது. மூல காரணத்துக்கான சிகிச்சையை பெறாமல் தூக்க மாத்திரைகளை உட்கொள்வதும் ஒருகட்டத்தில் பிரச்னையாக மாறும்.
  • மனச்சோர்வுக்கு மற்றொரு முக்கியமான காரணம் தனிமை. சமூகத் தொடர்பு ஏதும் இல்லாமல் இருப்பதால், அதனால் கிட்டக்கூடிய மகிழ்ச்சியையும் இவர்கள் இழக்கிறார்கள்.
  • பாலிஃபார்மசி என்பது குறைந்தபட்சம் ஐந்து மருந்துகளின் வழக்கமான பயன்பாடு என வரையறுக்கப்படுகிறது. இது வயதானவர்களிடையே பரவலாகக் காணப்படுகிறது. பாதகமான மருத்துவ விளைவுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.
  • நீரிழிவு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இதயம் சார்ந்த பிரச்னைகளும்,ஸ்ட்ரோக் அபாயங்களும் மூத்தகுடிமக்கள் மத்தியில்
  • காணப்படுகின்றன. ஆண்களுக்கு புரோஸ்டேட் கேன்சரும், பெண்களுக்கு செர்விக்கல் அல்லது எண்டோமேட்ரியல் கேன்சரும் தாக்கக்கூடிய அபாய நிலைகளும் மூத்தகுடிமக்களுக்கு உண்டு.
  • 25 சதவிகித மூத்தகுடிமக்கள் நீரிழிவோடுதான் வாழ்கின்றனர். நீரிழிவு அறிகுறிகள் இருந்தால் 45 வயது முதல் ஆண்டுதோறும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
  • புகை, மது பழக்கங்களின் காரணமாகவும் முதியோர்கள் பலவித சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். இவற்றை விட்டுவிடுவது முதுமை நாள்களை சிரமமின்றிக் கழிக்க உதவியாக இருக்கும்.
  • நிமோனியா, ஃப்ளு உட்பட முதியோர்களுக்கான தடுப்பூசிகளைத் தடுக்காமல் செலுத்திக் கொள்வது அவசியம்.

வயதுக்கேற்ற வாழ்க்கை நடைமுறைகளை பின்பற்றினால் முதுமை என்பது சோக பருவமாக இல்லாமல், அது ஒரு புதிய இளமையாக மாறும்!

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801