இனப்பெருக்க ஆரோக்கியத்தைக் குலைக்கும் ரசாயனங்கள்

இனப்பெருக்க ஆரோக்கியத்தைக் குலைக்கும் ரசாயனங்கள்
January 23 07:39 2025 Print This Article

கடந்த 50 ஆண்டுகளில், பிளாஸ்டிக் உற்பத்தி 50 மில்லியன் டன்களிலிருந்து வருடத்துக்கு 300 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது. இந்த பிளாஸ்டிக்குகளில் காணப்படும் நாளமில்லா சுரப்பியைக் குலைக்கும் ரசாயனங்கள் (Endocrine Disrupting Chemicals – EDCs) இனப்பெருக்க ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இனப்பெருக்க ஆரோக்கியத்துக்கு ஹார்மோன்கள் மிக முக்கியமானவை. ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஆகிய இரண்டு முக்கிய பாலியல் ஹார்மோன்கள் ஆண், பெண் இருபாலரின் இனப்பெருக்கச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றன. EDCs என்று அழைக்கப்படும் இந்த தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இயற்கையான ஹார்மோன் செயல்பாடுகளில் தலையிட்டு, பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

EDCs எங்கெல்லாம் காணப்படுகின்றன

  • EDCs காற்று, உணவு, நீர் மற்றும் அன்றாட பயன்பாட்டு பொருட்கள் மூலம் நம் உடலுக்குள் நுழைகின்றன. முக்கியமாக:
  • புரோமினேட்டட் ஃப்ளேம் ரிடார்டன்ட்ஸ் (BFRs): ஆடைகள், மின்னணு சாதனங்கள், மற்றும் மரச்சாமான்களில்…
  • பாலிகுளோரினேட்டட் பைபினைல் (PCBs): மின் உபகரணங்கள், எண்ணெய் அடிப்படையிலான வண்ணங்களில்…
  • தாலேட்டுகள்: உணவு பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், அழகுசாதன பொருட்கள், விளையாட்டு பொம்மைகளில்…
  • DDT: பூச்சிக்கொல்லிகளில்…
  • அட்ராசின்: களைக்கொல்லிகளில்…
  • பிஸ்பினால் A (BPA): பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கொள்கலன்களில்…

இனப்பெருக்க ஆரோக்கியத்தில் EDCs-ன் தாக்கங்கள்  

பெண்களில்… 

  • உயர் BPA அளவு கருப்பைக் கட்டிகள் உருவாக வழிவகுக்கிறது
  • எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் கர்ப்பப்பைக் கட்டிகள் ஏற்படலாம்
  • மாதவிடாய் சுழற்சிப் பாதிப்புகள்
  • முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம்

ஆண்களில்… 

  • விந்தணு உற்பத்திக் குறைபாடுகள்
  • விரை இறக்கம் மற்றும் சிறுநீர்ப்பாதைக் குறைபாடுகள்
  • பாலியல் வளர்ச்சி சார்ந்த பிரச்னைகள் பொதுவான தாக்கங்கள்
  • DDT முன்கூட்டிய பருவமடைதலைத் தூண்டலாம்
  • தாலேட்டுகள் இனப்பெருக்கச் செல்களின் உற்பத்தியைக் குறைக்கலாம்
  • கருவுறுதல் திறன் பாதிப்பு

EDCs பாதிப்புகளைக் குறைக்க முக்கிய வழிமுறைகள்

  1. உணவு பழக்கங்களில் மாற்றம்

  1. அன்றாட பயன்பாட்டு மாற்றங்கள்

  • வெப்ப ரசீது (தெர்மல் பிரிண்டிங்) காகிதங்களைத் தொடுவதைத் தவிர்க்கவும்
  • BPA/தாலேட்டுகள் உள்ள பொருட்களைத் தவிர்க்கவும்
  • பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதில் கண்ணாடி அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாட்டில்களைப் பயன்படுத்தவும்
  1. வீட்டு பராமரிப்பில் கவனம்

  • பழைய கார்பெட்டுகள் மற்றும் ஃபோம் வெளிப்பட்ட மரச்சாமான்களை மாற்றவும்
  • நான்-ஸ்டிக் பாத்திரங்களைத் தவிர்க்கவும்
  • வீட்டை நன்கு காற்றோட்டமாக வைத்திருக்கவும்

EDCs பாதிப்புகளைக் குறித்த விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 

மூலம் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். குறிப்பாக இளம் தலைமுறையினரின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, EDCs பாதிப்புகளைக் குறைக்க அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். ஆம்… சிறிய மாற்றங்கள் கூட நீண்டகால ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவும்!

EDCs எச்சரிக்கை அறிகுறிகள்

பெண்களில்… 

  • முறையற்ற மாதவிடாய் சுழற்சி
  • கருப்பைக் கட்டிகள்
  • மலட்டுத்தன்மை
  • முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம்

ஆண்களில்… 

  • குறைந்த விந்தணு எண்ணிக்கை
  • ஆண்மைக் குறைபாடு
  • விரை குறைபாடுகள்
  • மலட்டுத்தன்மை

பொதுவாக EDCs அதிகம் காணப்படும் பொருட்கள்

  • பிளாஸ்டிக் உணவு கொள்கலன்கள்
  • டின் பாக்கெட் உணவுகள்
  • அழகுசாதனப் பொருட்கள்
  • குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள்
  • வீட்டு சுத்தம் செய்யும் பொருட்கள்

ஆபத்துக் குறியீடுகள் பிளாஸ்டிக் பொருட்களில் பார்க்க வேண்டியவை

  • 3- PVC/தாலேட்டுகள்
  • 6 – பாலிஸ்டைரீன்
  • 7 – பிஸ்பினால் A (BPA) பாதுகாப்பான மாற்றுப் பொருட்கள்

பரிந்துரைக்கப்படுபவை

  • கண்ணாடி கொள்கலன்கள்
  • ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள்
  • இயற்கை அழகுசாதனப் பொருட்கள்
  • மரத்தால் ஆன விளையாட்டுப் பொருட்கள்
  • பருத்தி ஆடைகள்

தினசரி பரிசோதனை பட்டியல்

  • பிளாஸ்டிக் உணவு கொள்கலன்கள் பயன்படுத்தினீர்களா?
  • வெப்பப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் உணவு வைத்தீர்களா?
  • பூச்சிக்கொல்லி தெளித்த பழங்கள்/காய்கறிகள் உண்டீர்களா?
  • சுத்திகரிக்கப்படாத குடிநீர் அருந்தினீர்களா?

EDCs குறைந்த உணவுகள் தேர்வு செய்ய வேண்டியவை 

  • இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட காய்கறிகள்
  • அங்கீகரிக்கப்பட்ட இயற்கை உணவுகள்
  • தானியங்கள் & பருப்பு வகைகள்
  • புதிதாக தயாரிக்கப்பட்ட உணவுகள்

நினைவில் கொள்க

  • முன்னெச்சரிக்கையே பாதுகாப்பு
  • இயற்கையே சிறந்த தேர்வு
  • விழிப்புணர்வே மாற்றத்தின் முதல் படி
  • ஆரோக்கியமான தற்போதைய தலைமுறையே ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்கும்

EDCs என்று அழைக்கப்படும் இந்த தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இயற்கையான ஹார்மோன் செயல்பாடுகளில் தலையிட்டு, பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

Dr. S. திவ்யா MBBS, MS, (OG), MCE (Australia)
சிறப்பு மருத்துவர் – ART, லேப்ராஸ்கோபிக் மற்றும் ஹிஸ்டரோஸ்கோபிக் அறுவை சிகிச்சைகள் மற்றும் கரு மற்றும் கைனாக் அல்ட்ராசவுண்ட்
மா காவேரி மருத்துவமனை, திருச்சி

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801