மேதி தெப்லா

by admin | March 28, 2023 9:45 am

என்னென்ன தேவை

  1. கோதுமை மாவு 50 கிராம்
  2. வெந்தயக்கீரை (மேத்தி இலைகள்) 25 கிராம்
  3. சிவப்பு மிளகாய்த் துண்டுகள் 5 கிராம்
  4. தயிர் 50 கிராம்
  5. எண்ணெய் 2 தேக்கரண்டி

எப்படிச் செய்வது?

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய மேத்தி இலைகள், சிகப்பு மிளகாய் துகள்கள், தயிர் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.
  2. மாவை சம பாகங்களாகப் பிரித்து மெல்லிய தெப்லாவாக உருட்டவும்.
  3. தவாவை சூடாக்கி, தெப்லாவை இட்டு இருபுறமும் வேக வைக்கவும்.

என்னென்ன சத்துக்கள்?

கலோரிகள்: 330 கிலோகலோரி

புரதம்: 7.6 கிராம்

கொழுப்பு: 13 கிராம்

கார்போஹைட்ரேட்: 35 கிராம்

சோடியம்: 25 மிகி

பொட்டாசியம்: 269 மி.கி

பாஸ்பரஸ்: 319 மி.கி

பலன் என்ன

சிறுநீரக நோயாளிகளுக்கு (அனைத்து நிலைகளுக்கும்) சேர்க்கக்கூடிய பச்சை இலைக் காய்கறிகளில் வெந்தயக்கீரையும் ஒன்றாகும். நார்ச்சத்து அதிகமுள்ள இந்த உணவில் சோடியம், பொட்டாசியம் ஆகியவை குறைவாகவே உள்ளன.

Source URL: https://kauveryhospital.com/blog/recipes/methi-thepla-recipe/