கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய புதிய தகவல்கள்

கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய புதிய தகவல்கள்
November 25 07:51 2020 by admin Print This Article

தற்போது சோதனையில் உள்ள பல புதிய தடுப்பூசிகள் விரைவாக கிடைப்பது குறித்தும், அதன் பின்னர் “இயல்பான” வாழ்க்கைக்கு திரும்புவது குறித்தும் பெரும் நம்பிக்கை உருவாகியுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்பூசி செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, விரைவில் கிடைக்கும் பல்வேறு தடுப்பூசிகள் ​​ பற்றிய விவரங்களை மக்கள் அறிந்து கொள்வது அவசியம். அவற்றை கீழே காணலாம் :

ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசி

ஏறத்தாழ 43,000 பேர் பங்கேற்ற சோதனைகளில்  COVID 19 ஐ தடுப்பதில் தடுப்பூசி 90% பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சேமித்துவைப்பது மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் இந்த தடுப்பூசியின் சிக்கல் ஆகும். இது -70 டிகிரி சி வெப்பநிலையில் வைக்கப்பட வேண்டும். இல்லையெனில் அதன் செயல்திறன் குறையும்.

மாடர்னா தடுப்பூசி

சுமார் 30,000 பேர் ஈடுபட்டுள்ள இந்த தடுப்பூசியின் சோதனை முடிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளன – இது 94.5% பயனுள்ளதாக இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

ஃபைசரை விட சேமித்து வைத்தல் மற்றும் போக்குவரத்து எளிதானது, ஏனெனில் -20 டிகிரி சி-யில் சேமித்து வைத்தால் தடுப்பூசி 6 மாதங்கள் வரை பயனுள்ளதாக இருக்கும், இந்த வெப்ப நிலையை இன்று பல குளிர்சாதன வசதிகளால் அடைய முடியும்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் / அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி

20,000 தன்னார்வலர்களுடன் சோதனைகள் தொடர்கின்றன.

இந்த தடுப்பூசி  90% பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தடுப்பூசி முதியவர்களுக்கு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது தடுப்பூசியை மிகவும் குளிர்ந்த வெப்பநிலையில் சேமித்துவைக்க தேவையில்லை. சாதாரண குளிர்சாதன வசதியே போதுமானதாக இருக்கும்.

ஸ்பூட்னிக் வி தடுப்பூசி

இந்த ரஷ்ய தடுப்பூசி  COVID 19 ஐத் தடுப்பதில் 92% பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. .இந்த தடுப்பூசிக்கும் சேமித்துவைக்க மிகவும் குளிர்ந்த வெப்பநிலை தேவையில்லை. சாதாரண குளிர்சாதன  வசதியே போதுமானதாக இருக்கும்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய பரிந்துரைக்கு  உங்கள் மருத்துவரை அணுகுவதே சிறந்த  வழிமுறை ஆகும்.

  Categories:
write a comment

1 Comment

  1. Sreeja
    November 22, 13:21 #1 Sreeja

    Important information that are crucial at this point of time.

    Reply to this comment

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.