கோவிட் -19 உடன் எனது அனுபவம்

by admin | December 3, 2020 10:52 am

நமது காவேரியில் கோவிட்  நிகழ்வுகள்

டாக்டர் சுரேஷ் வெங்கிடா, மருத்துவ இயக்குனர் (குழுமம்), காவேரி மருத்துவமனை  

எனது தொண்ணூற்று ஏழாவது வயதில் கோவிட் நோயால்  பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.   நான் இந்த  மருத்துவமனையை விட்டு வெளியேறும்போது உயிரற்றவனாக  வெளியேறுவேன்  என்று  நினைத்தேன்.   

வயது எனும் மோசமான துருப்புச்சீட்டை  கையில் வைத்துக்கொண்டு மருத்துவமனையுடன்

பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தேன்.   இந்த “கோ’ எனும் புதிய நோயிலிருந்து

நான் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் யோசனை செய்தேன் .

இதுபோன்ற பல மோசமான  நிகழ்வுகளைப் பற்றி அடுத்த சில நாட்களில் நான் அறிந்துகொண்டேன். என்னைச் சுற்றி  நடந்து கொண்டிருந்த  நிகழ்வுகளை நான் கவனித்தேன், உணர்ந்தேன்,  நேரம் முடிவதற்குள்  ஒரு  பாடத்தை கற்றுக் கொள்வேன் என்று நம்பினேன்.

இந்த கட்டுரையில் “கோ’  என்ற  வார்த்தையை மீண்டும் உச்சரிக்கக் கூடாது.  மனிதர்களாகிய  நாம்,  ஒரு பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் அந்தப் பெயருக்கான  சக்தி அதிகரிக்கும்  என்று நம்புகிறோம். காட்டுக்குள் கருத்தரித்து, சந்தையில் பிரசிவித்து,  சீன நகரமான வூஹானில் மனிதனுக்கு ஒரு மோசமான நோயை வழங்கிவிட்டது.  இந்த நோய் படிப்படியாக மகத்தான சக்தியைப் பெற்று மனதினின் உடலினுள்   ஊடுருவிட்டது.

என் மூக்கின் துவாரங்கள் வழியாக அது என்னைத் தாக்கியது எனக்குத் தெரியும். நான் சந்தையில் இருந்தேன், காய்கறிகளை வாங்கினேன், என்னைச் சுற்றி பலர் நின்றுகொண்டிருந்தார்கள்.  காய்கறிகளை வாங்கிய பின்பு,  காய்கறி வியாபாரிக்கு பணம் செலுத்த நான் குனிந்த போது  மூக்கடைப்பு ஏற்படுவதுபோல் உணர்ந்தேன்.   இந்த புது வைரஸும், பொதுவாக   வரக்கூடிய சளி சம்பந்தப்பட்ட வைரஸ் என்று தெரிந்துகொண்டேன்.   இப்போது நான் ஒரு பாடம் கற்றுக்கொண்டேன்.   என்னவென்றால், மக்கள் கூட்டம் எங்கு கூடுகின்றதோ அங்கு இந்த வைரஸின் பாதிப்பு இருக்கும் .   இவைகள் நான் கற்றுக்கொண்ட பாடங்கள்.

சில நாட்களுக்குப் பிறகு, தொண்டையில் புண், தலைவலி, உடல் வலி, காய்ச்சல் போன்றவை தோன்றின. எனக்கு பயங்கரமான உடல் சோர்வு ஏற்பட்டது,  எனக்கு சளி பிடித்திருந்தது.  எனது தொண்டையில் வறண்ட இருமல் இருந்தது, எனது மார்பில் ஏற்படும் சுவாசத்தை என்னால் உணர முடியவில்லை.

நாம் சளி பிடித்திருந்தால் உணவில் சேர்த்துக்கொள்ளும் மிளகு ரசத்தின் சுவையை என்னால் உணர முடியவில்லை.   

எனது மருத்துவரை சந்திக்க சென்ற போது, நான் சில வித்தியாசங்கள் உணர்ந்தேன். அவர் எனக்கு முகக்கவசத்தை கொடுத்தார், அவரும் ஒரு கவசத்தை எடுத்துக்கொண்டு எனது கைகளை சானிடைசர் (கிருமிநாசினி) கொண்டு சுத்தம் செய்து கொள்ள அறிவுறுத்தினார்.

என்னிடமிருந்து இடைவெளியை பின்பற்றி, மருத்துவர் ஒரு தொடுகணினி மூலம் என் உடலில்  ஏற்பட்டுள்ள  புதிய அறிகுறிகளை தேர்ந்தெடுக்க சொன்னார், நான் உணர்ந்த அறிகுறிகள் மட்டுமல்லாமல் மேலும் சில அறிகுறிகளான மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு போன்றவற்றையும் நான் தேர்வு செய்தேன்.  அவருடைய டெஸ்க்டாப் கணினி நான் தேர்ந்தெடுத்த தகவலை அவரிடம் காண்பிப்பதைக் காண முடிந்தது.  அவருடன், செவிலியர் ஒருவர் கவுன், முகக்கவசம், கையுறைகள் மற்றும் ஒரு கண்ணாடி அணிந்திருந்தார்.   அந்த செவிலியர், நான் பயன்படுத்திய தொடுகணினியை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தார்.  பின்னர் எனது உடல் வெப்பநிலையையும், மூச்சுவிடும் திறனையும், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவையும் கணக்கிட்டு மருத்துவரிடம் தெரிவித்தார்.  

அடுத்த  வினாடியே அனைத்தும் தலைகீழாக மாறிப்போனது.  என்னைத் தொடாமல், சமூக இடைவெளியுடன் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.  இது நோய்த் தொற்றினை தவிர்க்கும் வழி என்பது எனக்கு புரிந்தது.  இப்படி பல்வேறு விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். பின்னர்தான் தெரிந்தது, என்னைப்போல் அங்கு மேலும் 20 பேர் அமர்ந்திருந்தனர் என்று.     எனது மருத்துவர் அப்போதுதான் அந்த வைரஸின் பெயரை முதன் முதலில் என்னிடம் கூறினார்.  

என்னை பரிசோதித்து மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று எனது மருத்துவர் அறிவுறுத்தினார். ‘சோதனை’ என்ற சொல் விரைவில் என் வாழ்வில் எங்கும் நிறைந்திருக்கும் என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.  

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு, எனது மூக்கின் துவாரத்தில் ஒரு மெல்லிய குச்சிவடிவதில் பஞ்சுபோன்ற பாகத்தைக்கொண்டு சளியை மருத்துவப் பரிசோதனைக்காக எடுத்தது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது.

ஆர்.டி.பி.சி.ஆர்  எதைக் குறிக்கிறது என்பதை நான் தெரிந்து கொண்டேன். மேலும் இந்த வைரஸ் மாதிரியை மரபணு சோதனைக்கு உட்படுத்தி ஆய்வு செய்யும் சோதனை பற்றியும் நான் தெரிந்து வைத்துக்கொண்டேன்.  எனது முடிவு எதிர்மறையாக வந்த போது நான் மீண்டும் மீண்டும் அந்த வார்த்தையை கேட்பேன் என்று எண்ணிப்பார்க்கவே இல்லை.

மருத்துவமனையில் எனது வலதுகையில் உள்ள நடுவிரலில் ஒரு கருவியைப் பொருத்தினார்கள்.  அந்தக் கருவி தொடர்ச்சியாக இரத்தித்திலுள்ள ஆக்சிஜன் அளவினை எண்களுடன் காட்டிக்கொண்டிருந்தது.  அதன் பெயர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் என்று கூறினார்கள்.  எனதுநிலை குறித்து நான் மகிழ்ச்சியாகவோ வருத்தமாகவோ இல்லை.  ஆனால் மருத்துவர் அந்த எண்களால் மகிழ்ச்சியாக இல்லை என்பதை மட்டும் உணர்ந்தேன்.  மருத்துவர் தன்னுடன் வேலை பார்க்கும் மருத்துவருக்கும் எனக்கும் ‘ஹாப்பி ஹைபோக்ஸியா’  என்றால் என்ன என்பதை விளக்கிக் கூறினார்.  இது எனக்குப் புதிதாக இருந்தது.  

எனக்கு இணை நோய்கள்  உள்ளது.    நான் உயர்  இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயுடன்    அனுமதிக்கப்பட்டேன்.    பலர் நீரிழிவு,  சிறுநீரக பாதிப்பு,  நுரையீரல் பாதிப்பு,  புற்றுநோய் போன்ற  பல வியாதிகளுடன் அனுமதிக்கப்பட்டனர்.    இப்படிப்பட்ட இணைநோய்கள் இருந்தால் நோய்த்தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும்.

இது சிடி ஸ்கேன் எடுப்பதற்கான நேரம்.  இந்த வைரஸானது தாக்கக்கூடிய முதல் இடம் நுரையீரல்.  எனவே இந்த ஸ்கேன் மூலம் நுரையீரல் பாதிப்பு மிகவும் துலியமாகப் படம் பிடித்துக் காட்டியது, அதற்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அதிக மதிப்பெண்கள் சிறந்தது என்று நான் எண்ணினேன்.  ஆனால், நான் கற்பனை செய்தது போல் இல்லை,  அதிக மதிப்பெண்கள் ஆபத்தானது !!

ஆய்வக சோதனைகள் வரிசையில் இருந்தன.  அவர்கள் அடிப்படையில் இரண்டு மிக முக்கியமான விஷயங்களைப் பார்த்தார்கள்.  ஒன்று, எனது உயிர் அணுக்கள் குறைவாக இருக்கின்றனவா என்றும், நோய் எதிர்ப்பு சக்தியுடன் செயல்படுகிறதா என்றும்,  இரண்டு லிம்போசைட்டுகள் எனப்படும் பயனுள்ள     உயிரணுக்களில் எனக்கு குறைவாக இருக்கின்றதா என்றும்.  “”வைரஸ் தொற்றின் அழற்சியைப் பார்பதற்காக,  அவர்கள் என் இரத்தத்தில் சில சோதனைகளையும் செய்தனர்.    இப்படி  நடப்பது ஒரு நல்ல விஷயம் அல்ல என்பதை நான் புரிந்து கொண்டேன்’.

நானும் எனது உடல் நலனில் அக்கறை கொண்டவரும்,  ஒரு முடிவு எடுக்கும் நேரம் வந்தது.  அது என்னை தனிமையான வார்டில் அனுமதிப்பதுதான். எனது மருத்துவரையும், செவிலியர் மற்றும் சக மருத்துவ ஊழியர்களை கண்டதும் நான் வினோதமான ஒன்றை உணர்ந்தேன்.  அது என்னவென்றால் என்னை போன்ற நோயாளிகளைக் கவனிக்கும் மருத்துவ ஊழியர்கள் அனைவருக்கும் நோயாளியை விட அதிக ஆபத்து உள்ளது என்று. இந்த உண்மையை அவர்களும் அறிவார்கள் என்று எனக்குத் தெரியும்.   ஆனால் அவர்கள் எடுத்துக்கொண்ட பயிற்சி மற்றும் தயார் நிலை போன்றவை தடையின்றி தொடர்ந்து பணியாற்றும் தைரியத்தையும், வலிமையையும் அவர்களுக்கு கொடுத்துள்ளது.  இவர்கள் அனைவரும் குழுவாக பணியாற்றுவதில்  வல்லுனர்களாவரகள்.

நான் கவனித்த ஒரு விஷயம் நோயாளிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் இருவராக இணைந்து நோயாளிகளை கவனித்தனர். இது அவர்கள் நோயாளிகளின் பாதுகாப்பில் முக்கியத்துவம் செலுத்துவதைக் காண்பித்தது. அவர்களில் சிலர்  நான் உங்கள் நண்பன் எனும்  சின்னத்தை  மார்பில் அணிந்திருந்தனர்.  மேலும்,  இது எனது பழைய நினைவுகளை தூண்டியது.   போர்க்களத்தில் வீரர்கள் ஒவ்வொருவரும் எதிரிகளிகளிடமிருந்து காப்பது போல், நாம்  இந்த கொடிய வைரஸிடமிருந்து  மனிதர்களை காப்பாற்ற வேண்டும்.

தனிமை வார்டு, தகவல் பரிமாற்றம், மற்றும் ஐ.சி.யூ. ஆகியவை புதிய அர்த்தத்தை தந்தது.மக்களிடையே வேறுபாடு காண்பது எளிதானது அல்ல, மேலும் அங்கு உரையாடல் சாத்தியமில்லை. அங்கு ஊழியர்கள் பெரிய அடையாள அட்டையை அணிந்திருந்தனர். மேலும் சைகை மொழி மற்றும் கழுத்தில் அணியும் ஒலிபெருக்கி மற்றும் காலர் மைக்குகள், அவர்களுடன் உரையாடுவது, மிகவும் வசதியாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.

எனக்கு நிமோனியா இருப்பதால், நானும் எனது மருத்துவர்[1] மற்றும் செவிலியர் மூவரும் ஒரு உடனடி உடன்படிக்கைக்கு வந்தோம்.  அது என்னவெனில் எனது நுரையீரலுக்கு ஆக்சிஜன் தொடர்ந்து கிடைக்க வழி செய்வதே ஆகும்.

எனக்கு சுவாசிக்க அதிக ஆக்சிஜன் தேவைப்பட்டதால், அதிக ஆக்சிஜன் ஓட்டம் கொண்ட முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. நான் அவ்வப்போது பாதிக்கப்பட்டுக் கொண்டே இருந்தேன்.      பிறகு ஆக்ஸிஜன் என்மார்பில் மூடியிருந்த கதவுகளைத் திறந்தது போல் உணர்ந்தேன், எளிமையாக சுவாசிப்பது எனது உடல்நல முன்னற்றத்தின் அறிகுறியாகும்.

நான் அவ்வப்போது பாதிக்கப்பட்டுக் கொண்டே இருந்தேன்.   இந்த ஆக்ஸிஜன் என் மார்பில் மூடியிருந்த கதவுகளைத் திறந்ததுபோல் உணர்ந்தேன்,  நான் எளிமையாக  சுவாசிப்பது  எனக்கு நம்பிக்கையைத் தந்தது.

நுரையீரலுக்குள் காற்று செல்வது அவ்வளவு எளிதல்ல என்பதை நான் உணர்ந்தேன். இரத்தத்திற்கு ஆக்ஸிஜனை மாற்றுவதற்கும், பிரித்தெடுப்பதற்கும் ஒரு தடையிருக்கும். இதற்கு காரணம் எனது நுரையீரல் பாதையில் தடை உள்ளது. வைரஸ் இரத்த நாளங்களை அடைத்துவிட்டது.  இவற்றையெல்லாம்  புரிந்து கொள்வதில் எனக்கு எந்த சிரமமும் இல்லாததால் மருத்துவர் எனக்கு விளக்கிக் கூறியது எளிமையானதாக இருந்தது.

மருந்துகளைப் பற்றி ஒரு மருத்துவர் தன்மையாக எடுத்துச் சொல்வது எனக்குப் புதுமையாக இருந்தது.  குணம்” என்னும் வார்த்தை, நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையேயான புதிய அர்த்தத்தை தந்தது.  அவர்கள் குறைவாக பேசுவதற்கு எடுத்துக்கொண்ட நேரம் அதிகமாக நோயாளிகளைப் பற்றி சிந்திக்க பயன்பட்டது.  ஆக்ஸிஜனைத் தவிர, எனக்கு மூன்று மருந்துகள் மட்டுமே வழங்கப்படும் என்று எனக்கு விளக்கப்பட்டது.  முதல் மருந்து இரத்தத்தை மெல்லியதாக மாற்றவும்,  இரண்டாவது மருந்து வைரஸை தடுப்பதற்கும், மற்றும் மூன்றுவது மருந்து கடைசியாக தொற்றை கட்டுப்படுத்துவதற்கும். எனது முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டது என்று எனக்கு உறுதியளிக்கப்பட்டது.  ஆக்சிஜன் மற்றும் இந்த மூன்று மருந்துகளும் எனக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் தந்தது.  குணமடைய ஒரு கதவு திறந்ததைப்போல்,  பாதுகாப்பாக நான் வெளியேறுவதற்கு எனக்கு ஒரு கதவு திறக்கும் என்று நம்பினேன்.


மேலும் படிக்க: கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய புதிய தகவல்கள்[2]


எனது வாழ்க்கை இந்த அறைக்குள்ளேயே முடிந்துவிடும், என்னை பார்க்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று நினைத்தேன்.  சில நோயாளிகளின் உடல்நிலை எதிர்பாராதவிதமாக பாதிக்கப்பட்டதை  என்னால் அங்கு காணமுடிந்தது.  அங்கு ஏ. ஆர். டி. எஸ். மையோகார்டியஸ், கடுமையான சிறுநீரககாயங்கள் ரத்தப்போக்கு மற்றும் உறைதல் போன்ற பல்வேறு நிலைகளை பற்றி அதிதீவிரமாக விவாதிப்பதை கண்டேன்.  இவை அனைத்தும் நோயாளிகளின் நிலைகளை குறிப்பிடுபவை. இவை அனைத்திற்கும் பயனுள்ள சிகிச்சைகள் உண்டு என்பதையும் நான் அறிந்துகொண்டேன்.

ஒருவாரம் கழித்து நான் சர்க்கர நாற்காலியில் உட்கார்ந்து அங்கிருந்து வெளியேறினேன்…!

நான் உயிரோடு இருக்கும் ஒரு பழைய போர்வீரன்.  இறப்பதற்கு முன் இந்தப் போர் முடிவுக்கு வருவதை காண விரும்புகிறேன்.  இந்தப் போர்க்களத்தில் போராடும் ஒவ்வொரு போராளிகளையும் நான் மதிக்கின்றேன், நம்புகின்றேன், மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்றேன்.

இந்த நோயால் இறப்பதற்கு வயது தான் மிக முக்கியமான காரணம்.  எனது வயது என்னை இறக்காமல் காத்தது.

நான் இன்னும் சிலகாலம் வாழ்வேன் என்று நம்புகிறேன்.  என்னால் தனித்து நிற்கமுடிவதை  எண்ணி  நான்  மகிழ்ச்சி அடைந்தேன்.   எனக்கு பிடித்த ஒரு   பாடலுக்கு இரவு முழுவதும் என்னால் நடனமாட  முடிந்தது.

நானும்,  என்னை கவனித்துக்கொண்டவரும் வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் காவேரியில் சிகிச்சை பெற்றபோது எனது வீட்டில் இருப்பது போலவே உணர்ந்தேன். காவேரி[3] குடும்பத்தினர் என்னை  நன்றாக    கவனித்தார்கள், பராமரித்தார்கள்,  உணவளித்தார்கள்,  தூங்கவைத்தார்கள்.   இப்போது நான்  நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

Dr. Venkita S Suresh
டாக்டர் சுரேஷ் வெங்கிடா,
மருத்துவ இயக்குனர் (குழுமம்),
காவேரி மருத்துவமனை  


ஆசிரியரின் பின்குறிப்பு:
இது ஒரு குறிப்பிட்ட மனிதரின் உண்மைக்கதையால் ஈர்க்கப்பட்டு, எழுத்தாளரின் சிந்தனையால் மெருகேற்றப்பட்ட நிகழ்வுகளாகும்.

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai, Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

Endnotes:
  1. மருத்துவர்: https://www.kauveryhospital.com/doctors
  2. கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய புதிய தகவல்கள்: https://www.kauveryhospital.com/blog/tamil-articles/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa-2/
  3. காவேரி: https://www.kauveryhospital.com/

Source URL: https://kauveryhospital.com/blog/tamil-articles/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-19-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/