உணவைக் குறைத்தால் எடை குறையுமா?

by admin-blog-kh | May 29, 2024 11:41 am

எடை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. எடை குறைக்க நிறைய பணம் செலவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. உடலை வருத்துவதாலோ, பணம் செலவழிப்பதாலோ கூடுதல் எடையும் பானை போன்ற வயிறும் குறைந்துவிடாது.

உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி – இரண்டும் இருந்தால்தான் எடையை குறைக்க முடியும்.

பருமனுக்கு என்ன காரணம் என்று அறியாமலே, மற்றவர்கள் சொல்லைக் கேட்டு என்னென்னவோ செய்கிறார்கள்.

பருமனுக்கு எவ்வளவோ காரணங்கள் உண்டு. அவற்றில் சில…

முதலில் பருமனுக்குச் சரியான காரணத்தை அறிந்துகொண்டு அதற்கான வழிகளை பின்பற்றுவது நல்லது. காரணம் அறியாமல் நம்மை நாமே வருத்தி உடலை மெலிய பண்ணுவதில் எந்தப் பயனும் இல்லை. ஆனால், உடற்பயிற்சி என்றைக்கும் நல்லதே!

‘ஒல்லியாக இருப்பதே அழகு’ என்று பெருமைப்படும் காலமிது. கட்டுடலாக இருப்பதோ இன்னும் அழகு. அத்தகைய கட்டுப்பாட்டை அடைவதற்கான வழிமுறைகளை அறிவதோடு, முறையாக பின்பற்றினால்தான் நல்ல முடிவு கிடைக்கும். அளவான உணவு, இடைவேளை விட்ட உணவுமுறை, ஒழுங்கான உடற்பயிற்சி ஆகியவற்றைக் கொண்டு ஆரோக்கிய வாழ்வை மேற்கொள்ளுங்கள்.

எடை குறைக்க உண்ணும் பழக்கவழக்கங்களையும் உடற்பயிற்சியையும் கவனித்தாலே போதுமானது.

உங்களைப் போலவே எடை குறைக்க விரும்புபவரின் நட்பைப் பேணுங்கள்… முடிந்தால் நடைப்பயிற்சியில் அவர்களையும் உங்களுடன் பங்குபெறச் செய்யுங்கள்…
வாழ்த்துகள்!

உணவுப் பழக்கம்

உடற்பயிற்சி

அதிரடி உதவாது!

அதிரடியாகஎடையைக் குறைக்கச் செய்யக்கூடிய மந்திர மாத்திரைகள் அல்லது அதிசய சிகிச்சைகள் எதுவும் இல்லை. அறிவியல் வழிமுறையில் அமையாத எடை குறைப்புத் திட்டங்கள், பட்டினி கிடப்பது போன்றவை வளர்சிதை மாற்றத்தில் (மெட்டபாலிசம் சேதத்தை ஏற்படுத்தும். முறையான மருத்துவ ஆலோசனை பெற்று[1] பராமரிக்க எளிதான திட்டத்தை பின்பற்றுவதே நீண்டகால பலன் அளிக்கும்.

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

Endnotes:
  1. முறையான மருத்துவ ஆலோசனை பெற்று: https://www.kauveryhospital.com/centers-of-excellence-and-specialties/endocrinology/

Source URL: https://www.kauveryhospital.com/blog/tamil-articles/does-cutting-back-on-food-make-you-lose-weight/