குளிர்காலத்தில் முதியோர் பராமரிப்பில் கூடுதல் கவனம்!

குளிர்காலத்தில் முதியோர் பராமரிப்பில் கூடுதல் கவனம்!
January 21 09:30 2025 Print This Article

குளிர்காலம் மக்களிடையே – குறிப்பாக முதியவர்களிடையே உடல்நலப் பிரச்னைகளை
ஏற்படுத்தக்கூடியது. இந்தப் பருவத்தில் சில நோய்கள் அவர்களிடையே அதிகம் காணப்படுகின்றன. அவர்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்னைகள்…

சுவாச நோய்த்தொற்றுகள்

குளிர்காலத்தில் மாசுபட்ட சுவாசத் துளிகள் காற்றில் எளிதாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவி நோய்த்தொற்றை ஏற்படுத்துகின்றன. முதியவர்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், அவர்கள் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, வயதின் இரு எல்லைகளிலும் உள்ளவர்கள், அதாவது குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

  1. ஃப்ளூ / சளிஜலதோஷம்: குளிர்காலத்தில் ஃப்ளூ வைரஸ் காற்றில் விரைவாகப் பரவி காய்ச்சல், குளிர், தலைவலி, உடல்வலி, சோர்வு, இருமல், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, தொண்டை எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும். இன்ஃப்ளுயன்சா வைரஸ் ஃப்ளூவையும், ரைனோவைரஸ் சாதாரண சளியையும் ஏற்படுத்துகிறது. மற்ற வைரஸ்களில் ரெஸ்பிரேட்டரி சின்சிடியல் வைரஸ் (RSV) மற்றும் கோவிட் 19 அடங்கும். கோவிட் 19 தொற்றில் கூடுதலாக சுவை அல்லது வாசனை உணர்வு இழப்பு ஏற்படலாம்.
  2. நிமோனியா: இது பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் ஏற்படும் கடுமையான நுரையீரல் தொற்று. காய்ச்சல், கபத்துடன் கூடிய இருமல், மார்பு வலி, மூச்சுத்திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தும். முதியவர்களில் கடுமையான தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருக்கும்.
  3. மூச்சுக்குழாய் அழற்சி: மார்புச் சளி என அறியப்படும் இது காற்றுப்பாதைகளில் அழற்சியுடன் கோழை உற்பத்தியை ஏற்படுத்தும். நோயாளிகள் வாரக்கணக்கில் நீடிக்கும் நாள்பட்ட இருமலால் அவதிப்படுவார்கள்.
  4. சைனஸ் தொற்று: சளி அல்லது பருவகால ஒவ்வாமையால் ஏற்படும் சைனஸ் தொற்று, சைனஸ் குழிகளில் சளி நிரம்பி தலைவலி, இருமல், மூக்கடைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்.
  5. தொண்டைப்புண்: குளிர் மற்றும் பிற வைரஸ்கள் தொண்டைப்புண்ணை ஏற்படுத்தும். ஆனால், கடுமையாகத் தொற்றக்கூடிய குரூப் A ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியா தொற்றால் ஏற்படும். இது தொண்டை, டான்சில்கள் மற்றும் அருகிலுள்ள நிணநீர் முடிச்சுகளில் அழற்சியை ஏற்படுத்தி, விழுங்குவதில் வலியை ஏற்படுத்தும்.
  6. ஆஸ்துமா: ஏற்கனவே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்துமாடிக் பிராங்கைட்டிஸ் காரணமாக மூச்சுத்திணறல் மற்றும் வீசிங் மோசமடையலாம்.

கண் தொற்று (கன்ஜங்டிவைடிஸ்)

பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் ஏற்படுகிறது. கண்கள் சிவந்து, வீக்கமடைந்து, நீர் வடியும். பின்னர் வலி மற்றும் கண்களில் கசிவு ஏற்படும்.

III. மூட்டு வலி -H2

குளிர்காலத்தில் ரூமடாய்டு ஆர்த்ரைடிஸ், ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் மற்றும் பல்வேறு மூட்டுக் கோளாறுகள் உள்ளவர்களில் மூட்டுத் திசுக்களின் விறைப்பு அதிகரிப்பதால் மோசமடைகிறது.

மாரடைப்பு மற்றும் பக்கவாதம்

குறைந்த வெப்பநிலையில் ரத்த நாளங்கள் சுருங்குவதால் இதயம் மற்றும் மூளைக்கான ரத்த ஓட்டம் குறைந்து மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகள் குளிர்காலத்தில் சற்று அதிகமாக ஏற்படுகிறது.

வறண்ட தோல் & அரிப்பு

வயதானவர்களில் சீபம் சுரப்பி சுரப்பு குறைவதால் தோல் வறண்டு காணப்படும். குளிர்காலத்தில் வறட்சி அதிகரித்து அரிப்பை ஏற்படுத்தும், சொரிவதால் தோல் உரிதல் ஏற்படும். தோல் வெடிப்பு, ரத்தக்கசிவு, வலி மற்றும் தொற்று ஏற்பட்டு சிகிச்சை தேவைப்படும். சோரியாசிஸ், எக்சிமா போன்ற பிரச்னைகள் மோசமடையலாம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சுவாசப் பிரச்னைகளைத் தடுக்க முதியவர்கள்

  • போதுமான ஓய்வு எடுக்க வேண்டும்
  • அதிக நீர், குறிப்பாக தொண்டை வறட்சியைத் தவிர்க்க வெதுவெதுப்பான நீரை சிறுசிறு மிடறுகளாக அருந்த வேண்டும்
  • இருமும்போதும் தும்மும்போதும் வாயை கைக்குட்டை அல்லது டிஷ்யூவால் மூட வேண்டும்
  • சளி உள்ளவர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தைக் கடைபிடிக்க வேண்டும். அவர்களின் ஆடைகள், போர்வைகள், கைக்குட்டைகள் போன்றவற்றைப் பிறர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்
  • அடிக்கடி கைகளை வெதுவெதுப்பான நீர் மற்றும் சோப்பால் கழுவ வேண்டும்
  • தினமும் ஒருமுறை ஆவி பிடிக்க வேண்டும் (இது தொண்டையை சுத்தம் செய்து, அடைத்த சைனஸில் இருந்து வடிகால் அமைத்து தலைவலியைக் குறைக்கும்)
  • தினமும் 2-3 முறை உப்பு நீரால் வாய் கொப்பளிப்பது தொண்டைப்புண் மற்றும் டான்சிலைட்டிஸுக்கு உதவும்.

பிராங்கைட்டிஸ், நாள்பட்ட இருமல் அல்லது வேறு எந்த சுவாசப் பிரச்னை உள்ளவர்களும் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும். வழக்கமான சுவாசப் பயிற்சிகலை மேற்கொள்வதும் ஆரோக்கியமான உணவு உண்பதும் பரிந்துரைக்கப்படுகிறது.

பிரச்னை இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தாலோ, மோசமடைந்தாலோ, தொற்று, மூட்டுப் பிரச்னைகள், பக்கவாதம், இதய பிரச்னைகள் ஏற்பட்டாலோ அவற்றைக் கட்டுப்படுத்த மருத்துவர்/முதியோர் நல மருத்துவர்/சம்பந்தப்பட்ட நிபுணரை அணுக வேண்டும்.

ஃப்ளூ & நிமோனியா தடுப்புக்கான தடுப்பூசிகள் கிடைக்கின்றன. 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்  இவை பரிந்துரைக்கப்படுகின்றன. இன்ஃப்ளுயன்சா தடுப்பூசி ஆண்டுதோறும் எடுக்க வேண்டும், நிமோனியா தடுப்பூசி வாழ்நாளுக்கு இரண்டு டோஸ்கள். முதியவர்களுக்கு பரிந்துரைக்கப்படும். மற்ற தடுப்பூசிகள்: டி டாப் தடுப்பூசி (10 ஆண்டுகளுக்கு ஒருமுறை) மற்றும் ஷிங்கிள்ஸ் தடுப்பூசி (2 டோஸ்கள்).

வெதுவெதுப்பான ஆடைகள், எடை குறைப்பு, மூட்டுக்களின் இயக்கத்துக்கான சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, தினமும் 15 நிமிடங்கள் கை & கால்களை வெதுவெதுப்பான நீரில் மூழ்க வைப்பது போன்றவை மூட்டு வலிகளைக் குறைக்க உதவும்.

இரவு நேரங்களில் திறந்த வெளியில் அல்லது மாடியில் தூங்குவதைத் தவிர்க்கவும்.

தோல் வறட்சி குளிர்காலத்தில் மோசமடைந்து அரிப்பை ஏற்படுத்தும். எனவே, தோலை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க மாய்ஸ்சரைசர்களை தாராளமாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. மருத்துவர் பரிந்துரைக்கும் ஆன்டிஹிஸ்டமைன் மருந்துகள் அரிப்புக்கு நிவாரணம் அளிக்கும்.

தொடர்புடைய வலைப்பதிவு: The Positive Impact Of Regular Exercise In Elders

வழக்கமான உள்ளரங்க நடை மற்றும் மென்மையான உடற்பயிற்சிகள் முதுகு மற்றும் அனைத்து மூட்டுக்களையும் நெகிழ்வாகவும் தடையின்றி இயங்கக்கூடியதாகவும் வைத்திருக்க உதவும். சுவாசப் பயிற்சிகள் அல்லது பிராணாயாமம் உடல் திசுக்களின் போதுமான ஆக்சிஜனேற்றத்தைப் பராமரிக்க உதவியாக இருக்கும்.

வைட்டமின்கள் & தாதுக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட சமச்சீர் உணவு உட்கொள்வது அவசியம். வைட்டமின் C நிறைந்த ஆப்பிள்கள், ஆரஞ்சுகள், கொய்யா, பப்பாளி, வைட்டமின் A நிறைந்த கேரட் போன்றவற்றை உண்ணலாம். புதிதாக சமைத்த வீட்டு உணவை உண்ண வேண்டும். வைட்டமின் D குறைபாடு சோர்வு, உடல்வலி போன்றவற்றை ஏற்படுத்தும். வைட்டமின் D மற்றும் கால்சியம் குறைபாட்டைத் தவிர்க்க  பால் மற்றும் பால் பொருட்கள், மீன், முட்டை, காளான், தயிர், ராகி ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த உணவு முதியவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

ஆரம்ப நிலையிலேயே கண்டறிக!

உடல்நலப் பிரச்னைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய காலமுறை உடல்நலப் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. முதியவர்களுக்கான முழுமையான ரத்தப் பரிசோதனை, சிறுநீரகச் செயல்பாட்டு சோதனைகள், ரத்த உப்புகள், கல்லீரல் செயல்பாட்டு சோதனைகள், கொலஸ்ட்ரால் விவரம், வைட்டமின் D, B12, சீரம் PSA (ஆண்கள்), வயிறு & இடுப்பு/புரோஸ்டேட் அல்ட்ராசவுண்ட், மேமோகிராம் மற்றும் பாப் ஸ்மியர் சோதனை (பெண்கள்), DEXA ஸ்கேன் ஆகியவை முதியவர்களுக்கு பயனுள்ளவை. வழக்கமான மருந்துகள், உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் போன்ற நீண்டகால பிரச்னைகளைக் கட்டுப்படுத்துவதும் முக்கியம்.

Dr. ஜி.எஸ்.சாந்தி
M.D., Geriatric Medicine
மூத்த முதியோர் மருத்துவ நிபுணர்
காவேரி மருத்துவமனை, சென்னை-வடபழனி

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801