அறிவோம் தெளிவோம் – கர்ப்பம் பற்றிய கட்டுக்கதைகள்!

by admin-blog-kh | December 26, 2024 3:59 am

தவறான எண்ணம்: கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பற்றது?!

உண்மை: கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும்; ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்; சிக்கல்களின் அபாயத்தையும் குறைக்கும். இருப்பினும், பாதுகாப்பான உடற்பயிற்சியை மேற்கொள்ள மருத்துவருடன் கலந்தாலோசிப்பது அவசியம்.

தவறான எண்ணம்: கர்ப்ப காலத்தில் நீங்கள் இரண்டு பேருக்குச் சாப்பிட வேண்டும்?!

உண்மை: கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து தேவைகள் அதிகரிக்கும்தான். அதே வேளையில், ‘இருவருக்குச் சாப்பிடுவது’ என்கிற எண்ணம் அதிக எடை அதிகரிப்பு மற்றும் உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அதற்குப் பதிலாக, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில்[1] கவனம் செலுத்துங்கள். மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைத்த உணவு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்.

தவறான எண்ணம்: கர்ப்பிணிகள் அனைத்து கடல் உணவுகளையும் தவிர்க்க வேண்டும்?!

உண்மை: சில வகையான கடல் உணவுகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை கரு வளர்ச்சிக்கு நன்மை பயக்கும். இருப்பினும், கர்ப்பிணிகள் அதிக அளவு மெர்க்குரி உள்ள மீன்களைத் தவிர்த்து, பல்வேறு கடல் உணவுகளை மிதமாக உட்கொள்ள வேண்டும்.

தவறான எண்ணம்: மசக்கையாக இருப்பது ஒரு நல்ல கர்ப்பத்தை குறிக்கிறது?!

உண்மை: கர்ப்பத்தின் ஆரம்பத்தில் மசக்கையாக இருப்பது பொதுவானது என்றாலும், அது இல்லாதது ஒரு சிக்கல் அல்ல. ஒவ்வொரு கர்ப்பமும் வேறுபட்டது. மேலும் இதன் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் பரவலாக மாறுபடும்.

தவறான எண்ணம்: கர்ப்பிணியின் வயிற்றின் அளவைப் பொறுத்து குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்?!

உண்மை: குழந்தையின் புடைப்பின் வடிவமும் நிலையும் தாயின் உடல் வடிவம் மற்றும் குழந்தையின் நிலை போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்படுகிறது. குழந்தையின் பாலினத்தைக் கணிக்க இது நம்பகமான முறை அல்ல!

தவறான எண்ணம்: கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் குழந்தைக்கு நிறைய முடி இருக்கும்?!

உண்மை: கர்ப்ப காலத்தில் ஏற்படும் நெஞ்செரிச்சலுக்கும், பிறக்கும்போது குழந்தைக்கு இருக்கும் கூந்தலுக்கும் எந்த அறிவியல் தொடர்பும் இல்லை. நெஞ்செரிச்சல் என்பது ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வயிற்றில் அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் பொதுவான அறிகுறியாகும்.

தவறான எண்ணம்: கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது பாதுகாப்பற்றது?!

உண்மை: பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கர்ப்ப காலத்தில் உடலுறவு பாதுகாப்பானது. அதோடு, தம்பதியின் நெருக்கத்தைப் பேணுவதற்கும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், சில மருத்துவ நிலைமைகள் அல்லது சிக்கல்கள் இருந்தால் மட்டும் உடலுறவில் இருந்து விலகி இருக்க வேண்டும். எனவே, மருத்துவருடன் கலந்தாலோசிப்பது அவசியம்.

தவறான எண்ணம்: எபிட்யூரல் ஊசி குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்?!

உண்மை: எபிட்யூரல் என்பது பெரும்பாலான பெண்களுக்கு பிரசவத்தின்போது ஒரு நல்ல வலி நிவாரணியாக அமைகிறது. இது ஒரு பாதுகாப்பான, பயனுள்ள முறையாகும். இது பொதுவாக குழந்தையின் ஆரோக்கியத்துக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது. உங்கள் மருத்துவரிடம்[2] இதன் நன்மைகள் மற்றும் சாத்தியமான பக்க விளைவுகள் பற்றி விவாதிக்கலாம்.

தவறான எண்ணம்: கர்ப்ப காலத்தில் நீங்கள் பயணம் செய்யக்கூடாது?!

உண்மை: கர்ப்ப காலத்தில் பயணம் செய்வது பொதுவாக பெரும்பாலான பெண்களுக்கு பாதுகாப்பானதே. குறிப்பாக இரண்டாவது மூன்று மாதங்களில். இருப்பினும், காரில் சீட் பெல்ட் அணிவது, நீர்ச்சத்துடன் இருப்பது மற்றும் நீண்ட பயணங்களின் போது அடிக்கடி ஓய்வு எடுப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

தவறான எண்ணம்: பிறப்புறுப்பு வழியே நடைபெறும் பிரசவத்தைவிட சிசேரியன் பிரசவங்கள் குழந்தைக்கு குறைவான அதிர்ச்சியையே அளிக்கும்?!

உண்மை: பிறப்புறுப்பு வழி மற்றும் அறுவைசிகிச்சை பிரசவம்[3]… இவை இரண்டுமே சரியான மருத்துவ மேற்பார்வையின் கீழ் செய்யப்படும் போது குழந்தைக்குப் பாதுகாப்பாக இருக்கும். தாய் மற்றும் கருவின் ஆரோக்கியம் உள்பட பல்வேறு காரணிகளின் அடிப்படையில்தான் பிரசவ முறை தீர்மானிக்கப்படுகிறது.

‘இருவருக்குச் சாப்பிடுவது’ என்கிற எண்ணம் அதிக எடை அதிகரிப்பு மற்றும் உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அதற்குப் பதிலாக, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் கவனம் செலுத்துங்கள்.

 

Dr. சுபாஷினி MBBS, MS(OG), DNB
மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர்
மா காவேரி மருத்துவமனை, திருச்சி

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

Endnotes:
  1. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில்: https://www.youtube.com/watch?v=7OCJVrFNDOY
  2. மருத்துவரிடம்: https://www.kauveryhospital.com/centers-of-excellence-and-specialties/obstetrics/
  3. பிறப்புறுப்பு வழி மற்றும் அறுவைசிகிச்சை பிரசவம்: https://www.kauveryhospital.com/centers-of-excellence-and-specialties/obstetrics-maa-kauvery-trichy/

Source URL: https://www.kauveryhospital.com/blog/tamil-articles/lets-know-pregnancy-myths/