பார்கின்சன் அன்றாட நடவடிக்கைக்ளைப் பாதிக்கும் பிரச்சினை

பார்கின்சன் அன்றாட நடவடிக்கைக்ளைப் பாதிக்கும் பிரச்சினை
May 31 12:53 2024 by admin Print This Article

பார்கின்சன் நோய் என்றால் என்ன?

பார்கின்சன் நோய் என்பது இயக்கத்தை பாதிக்கும் ஒரு மூளைக் கோளாறு. இது காலப்போக்கில் மோசமாகிறது. கற்றல் மற்றும் நினைவகம் போன்ற பிற மூளை செயல்பாடுகளையும் பாதிக்கிறது.

பார்கின்சன் நோயின் அறிகுறிகள் என்ன?

முதலில், பார்கின்சன் நோய் பெரும்பாலும் லேசான அறிகுறிகளை மட்டுமே ஏற்படுத்துகிறது. இது மோசமாகும்போது, அறிகுறிகள் ஒரு நபரின் வேலை அல்லது அன்றாட நடவடிக்கைகளைச் செய்யும் திறனைப் பாதிக்கலாம். இது இன்னும் கடுமையானதாக இருக்கும்போது, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில நேரங்களில் தங்களைக் கவனித்துக் கொள்ள உதவி தேவைப்படுகிறது.

பார்கின்சன் நோய் பின்வருவனவற்றை உருவாக்கலாம்

  • நடுக்கம்
  • மேதுவாக நகர்தல்
  • கடுமையாக அல்லது விறைப்பாக இருத்தல்
  • சமநிலையை இழத்தல் அல்லது நடக்க சிரமப்படுதல்

பார்கின்சன் நோய் சிலருக்கு இவற்றை ஏற்படுத்தலாம்

  • தெளிவாகச் சிந்திக்கும் திறனை இழத்தல்
  • சில நேரங்களில், யதார்த்தத்துடன் தொடர்பை இழத்தல் அல்லது இல்லாத விஷயங்களைப் பார்த்தல் (இவை “மாயத்தோற்றங்கள்” என்று அழைக்கப்படுகின்றன)
  • மனச்சோர்வு, கவலை அல்லது அன்றாட வாழ்வில் ஆர்வமின்மை
  • தூக்கமின்மை (விழிப்பதில் அல்லது தூங்குவதில் சிக்கல்) மற்றும் பகல் நேர தூக்கம் போன்ற தூக்கத்தில் சிக்கல்கள்
  • சோர்வாக உணர்தல்
  • வாசனை அறியும் திறனை இழத்தல்

இந்த நோய் மலச்சிக்கல், வியர்வை, சிறுநீர் கழிப்பதில் சிரமம், விழுங்குவதில் சிரமம் மற்றும் பாலியல் பிரச்சினைகள் போன்ற சிக்கல்களையும் ஏற்படுத்தலாம்.

பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட சிலர் ‘ஆர்த்தோஸ்பேடிக் ஹைபோடென்ஷன்” பிரச்சினையை சந்திப்பார்கள். அதாவது அந்த நபர் எழுந்து நிற்கும்போது ரத்த அழுத்தம் சடாரென குறையும். ரத்த அழுத்தத்தில் ஏற்படும் இந்த வீழ்ச்சி அந்த நபருக்கு தலைசுற்றல் அல்லது தலை பாரம் போன்ற உணர்வை ஏற்படுத்தக் கூடும்.

பார்கின்சன் நோய்க்கான பரிசோதனை உள்ளதா?

இல்லை. எந்த சோதனையும் இல்லை. ஆனால், ஒருவருக்கு பார்கின்சன் நோய் இருக்கிறதா என்பதை அவரது அறிகுறிகளின் அடிப்படையில் மருத்துவர்கள் பொதுவாகச் சொல்ல முடியும். சில நேரங்களில் அறிகுறிகள் வேறு ஏதோ காரணத்தால் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்த மருத்துவர்கள் சில சோதனைகளைப் பயன்படுத்துகின்றனர்.

பார்கின்சன் நோய்க்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

பார்கின்சன் நோயின் அறிகுறிகளை மேம்படுத்தும் பல மருந்துகள் உள்ளன. பார்கின்சன் நோய் மோசமடையாமல் இருக்க உதவும் மருந்துகளையும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால், இப்போதைக்கு எந்த சிகிச்சையாலும் நோயை குணப்படுத்த முடியாது.

பார்கின்சன் நோய் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள் சில நேரங்களில் தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்தக் காரணத்துக்காகவே, பெரும்பாலும் அறிகுறிகள் தொந்தரவு செய்யத் தொடங்கிய பின்னரே , நோயாளிகள் மருந்துகளை எடுக்கத் தொடங்குகிறார்கள்.

நன்றாக உணர நான் ஏதாவது செய்ய முடியுமா?

  • உடற்பயிற்சி செய்யுங்கள். இதனால் உங்கள் உடல் விறைப்பு மற்றும் பிற அறிகுறிகளால் பாதிக்கப்படுவது குறையும்.
  • சமூக ஆதரவு குழுக்களில் சேரவும், அங்கு உங்கள் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளும் மற்றவர்களுடன் நீங்கள் பேசலாம்.
  • உங்கள் வீட்டைப் பாதுகாப்பானதாக்குங்கள். அதனால் நீங்கள் விழும் வாய்ப்பு குறைவு. எடுத்துக்காட்டாக, தளர்வான விரிப்புகள் மற்றும் ஒழுங்கீனங்களை அகற்றவும். அனைத்து மின் கம்பிகளும் நேர்த்தியாக ஒட்டப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தவும்.
  • வாகனம் ஓட்டுவது பாதுகாப்பானதா என்பதை அவ்வப்போது சோதித்துக்கொள்ளுங்கள்.
  • பார்கின்சன் நோய் மற்றும் அதன் சிகிச்சை பற்றி அறிந்துகொள்ளுங்கள். அதன் மூலம் உங்களை நல்ல முறையில் பராமரித்துக்கொள்ள முடியும்.

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

  Categories:
write a comment

Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.