ஹெபடைடிஸ் ஏன்? எப்படி?

ஹெபடைடிஸ் ஏன்? எப்படி?
June 06 09:35 2024 Print This Article

ஹெபடைடிஸ் என்றால் என்ன?

கல்லீரலில் ஏற்படும் காயத்தையே ஹெபடைடிஸ் என்கிறோம். இது கல்லீரலைச் சேதப்படுத்தும். இந்த வீக்கம் மற்றும் அதனால் ஏற்படும் சேதமானது கல்லீரல் செயல்படும் தன்மையையும் பாதிக்கும்.

ஹெபடைடிஸ் ஒரு கடுமையான (குறுகிய கால) தொற்று அல்லது ஒரு நாள்பட்ட (நீண்ட கால) தொற்றாக இருக்கலாம். சில வகையான ஹெபடைடிஸ்கள் கடுமையான தொற்றுநோய்களை மட்டுமே ஏற்படுத்தும். மற்ற வகைகள் கடுமையான மற்றும் நீடிக்கக்கூடிய நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்.

ஹெபடைடிஸ் எதனால் ஏற்படுகிறது?

  • பல்வேறு வகையான ஹெபடைடிஸ் உள்ளன. அதற்கு பல்வேறு காரணங்களும் உள்ளன.
    வைரஸ் ஹெபடைடிஸ் மிகவும் பொதுவான வகை. ஹெபடைடிஸ் வைரஸ்களான ஏ, பி, சி, டி மற்றும் ஈ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றால் ஏற்படுகிறது. ஏ, பி மற்றும் சி ஆகியவை மிகவும் பொதுவானவை.
  • ஆல்கஹால் ஹெபடைடிஸ் அதிகமாக மது அருந்துவதால் ஏற்படுகிறது.
  • நச்சுத்தன்மை வாய்ந்த ஹெபடைடிஸ் சில விஷங்கள், ரசாயனங்கள், மருந்துகள் அல்லது கூடுதல் பொருட்களால் ஏற்படலாம்.
  • ஆட்டோ இம்யூன் ஹெபடைடிஸ் என்பது ஒரு நாள்பட்ட வகையாகும். இதில் நம் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பே நம் கல்லீரலைத் தாக்கும். இதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. ஆனால், மரபியலும் சுற்றுச்சூழலும் மிக்கிய பாத்திரத்தை வகிக்கலாம்.

வைரஸ் ஹெபடைடிஸ் எவ்வாறு பரவுகிறது?

  • ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஹெபடைடிஸ் ஈ ஆகியவை பொதுவாக பாதிக்கப்பட்ட நபரின் மலம், மாசுபட்ட உணவு அல்லது தண்ணீருடன் தொடர்புகொள்வதன் மூலம் பரவுகின்றன. முறையாகச் சமைக்கப்படாத இறைச்சி இறைச்சி போன்றவற்றைச் சாப்பிடுவதன் மூலமும் ஹெபடைடிஸ் ஈ ஏற்படக்கூடும்.
  • ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி மற்றும் ஹெபடைடிஸ் டி ஆகியவை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் ரத்தத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது. ஹெபடைடிஸ் பி மற்றும் டி மற்ற உடல் திரவங்களுடனான தொடர்பு மூலமாகவும் பரவலாம். போதைப்பொருள் ஊசிகளைப் பகிர்ந்துகொள்வது அல்லது பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வது போன்ற பல வழிகளில் இது நிகழலாம்.

ஹெபடைடிஸ் ஆபத்தில் உள்ளவர்கள் யார்?

ஹெபடைடிஸில் பல்வேறு வகைகள் இருப்பதால், அதன் ஆபத்துகளும் வேறுபட்டவையே. எடுத்துக்காட்டாக, பெரும்பாலான வைரஸ் வகைகளில், நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டால் உங்கள் ஆபத்து அதிகமாகும். நீண்ட காலமாக மது அருந்துபவர்களுக்கு ஆல்கஹால் ஹெபடைடிஸ் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஹெபடைடிஸ் அறிகுறிகள் என்ன?

ஹெபடைடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை.

அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதே தெரியாது.

பொதுவான அறிகுறிகள் இவை…

  • காய்ச்சல்
  • சோர்வு
  • பசியிழப்பு
  • குமட்டல் மற்றும்/அல்லது வாந்தி
  • வயிற்று வலி
  • கருமையான சிறுநீர்
  • களிமண் நிற மலம்
  • மூட்டு வலி
  • மஞ்சள் காமாலை, சருமம் மற்றும் கண்கள் மஞ்சளாகுதல்

கடுமையான தொற்று ஏற்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட 2 முதல் 6 மாதங்கள் வரை உங்கள் அறிகுறிகள் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். சிலருக்கு நீடிக்கும் தொற்று ஏற்பட்டிருந்தால், பல ஆண்டுகள் வரையிலும்கூட அவர்களுக்கு அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம்.

ஹெபடைடிஸ் வேறு என்ன பிரச்னைகளை ஏற்படுத்தும்?

நாள்பட்ட ஹெபடைடிஸ் பிரச்னையானது சிரோசிஸ் (கல்லீரல் அழற்சி), கல்லீரல் செயலிழப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சை மூலம் இந்த சிக்கல்களைத் தடுக்கலாம்.

ஹெபடைடிஸ் எவ்வாறு கண்டறியப்படுகிறது?

ஹெபடைடிஸ் பிரச்னைக்கான சிகிச்சைகள் என்னென்ன?

இதற்கான சிகிச்சையானது எந்த வகை ஹெபடைடிஸ் மற்றும் அது கடுமையானதா அல்லது நாள்பட்டதா என்பதைப் பொறுத்தது. கடுமையான வைரஸ் ஹெபடைடிஸ் பெரும்பாலும் தானாகவே சரியாகிவிடும். அந்த நோயாளி ஓய்வெடுக்க வேண்டும். போதுமான திரவங்களை உட்கொள்ள வேண்டும். சில சந்தர்ப்பங்களில், இது மிகவும் தீவிரமாக இருக்கலாம். அப்போது மருத்துவமனை சிகிச்சை தேவைப்படலாம்.

பல்வேறு நாள்பட்ட வகை ஹெபடைடிஸ் சிகிச்சைக்கு பல்வேறு மருந்துகள் உள்ளன. அறுவை சிகிச்சை மற்றும் பிற மருத்துவ நடைமுறைகளை உள்ளடக்கிய பிற சிகிச்சைகளும் இருக்கின்றன. ஆல்கஹால் ஹெபடைடிஸ் உள்ளவர்கள் குடிப்பதை நிறுத்த வேண்டும். நாள்பட்ட ஹெபடைடிஸ் கல்லீரல் செயலிழப்பு அல்லது கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுத்தால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

ஹெபடைடிஸ் வராமல் தடுக்க முடியுமா?

வகையைப் பொறுத்து, ஹெபடைடிஸ் அபாயத்தைத் தடுக்க அல் லது குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன. முதலில் குடிப் பழக்கத்தை கைவிட வேண்டும். ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி தொற்றைத் தடுக்க தடுப்பூசிகள் உள்ளன.

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801