இரும்புச்சத்து ஏன் அவசியம்?

இரும்புச்சத்து ஏன் அவசியம்?
December 31 06:47 2024 Print This Article

உடலின் ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்துக்கள் மிகமிக அவசியம். அந்த வகையில், இரும்புச் சத்து என்பது ஹீமோகுளோபின் உற்பத்திக்குத் தேவையான ஓர் அத்தியாவசிய கனிமமாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதோடு, இது உடலில் உள்ள பல்வேறு முக்கியமான செயல்முறைகளில் பங்கு வகிக்கிறது. ஆனால், ஒரு நபருக்கு போதிய இரும்புச்சத்து உடலில் இல்லாதபோது, அது இரும்புச்சத்து குறைபாடுள்ள ரத்தசோகைக்கு வழிவகுக்கிறது. இது உடலில் போதுமான ஆரோக்கியமான சிவப்பு ரத்த அணுக்கள் இல்லாத நிலை என்று கூறப்படுகிறது. ரத்தசோகையைத் தடுப்பதில் இருந்து ஆற்றலையும் கவனத்தையும் மேம்படுத்துவது வரை, இரும்புச்சத்தினால் ஏராளமான நன்மைகள் உள்ளன.

இரும்புச் சத்து உடலில் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளை ஏற்படுத்துகிறது?

ரத்தசோகையைத் தடுக்கிறது  

ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கடத்தும் ஹீமோகுளோபின் என்ற புரதத்தின் உற்பத்தியை அதிகரிக்க மனித உடலுக்கு இரும்புச் சத்து தேவைப்படுகிறது. ரத்தசோகை குறைபாட்டுக்குச் சிகிச்சையளிக்கவும் தடுக்கவும் இரும்புச் சத்து உதவுகிறது. இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதன் விளைவாக ஏற்படுகிறது. சோர்வு, மனநிலையில் மாற்றம், மூச்சுத் திணறல், இதயத் துடிப்பு போன்றவை ரத்தசோகையின் அறிகுறிகள். ரத்தசோகை வராமல் தடுக்க இரும்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இரும்புச் சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. சேதமடைந்த செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதன் மூலம் இது செயல்படுகிறது. இதனால் குணப்படுத்தும் செயல்முறை அதிகரிக்கும். ஒரு வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு நோய்த்தொற்றுகளுக்கு எதிராகப் போராடவும் நோய்களைத் தடுக்கவும் இது உதவுகிறது.

கவனம் மற்றும் செறிவை மேம்படுத்துகிறது

உங்கள் உணவில் இரும்புச் சத்து சேர்க்கப்படுவதற்கான மற்றொரு காரணம்… இது கவனம் மற்றும் செறிவை மேம்படுத்துவதற்கும் அறிவாற்றல் செயல்திறனை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. உடலில் இரும்புச் சத்து குறைவாக இருக்கும்போது, அது அறிவாற்றல் செயல்பாட்டைப் பெரிதும் பாதிக்கிறது. இதனால் குறைந்த கவனம் மற்றும் நினைவாற்றல் ஏற்படுகிறது,

ஆற்றலை அதிகரிக்கிறது

போதுமான அளவு இரும்புச் சத்து உணவுகளை உட்கொள்ளல் ஒரு நபரின் அன்றாடச் செயல்பாட்டில் குறுக்கிடும் சோர்வை போக்குகிறது. அதிக இரும்புச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, உங்கள் உடலின் ஆற்றல் அதிகரிக்கும். ஏனெனில், இரும்புச் சத்துக்கள் தசைகள் மற்றும் மூளைக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கின்றன. இது உடல் மற்றும் மனச் செயல்திறன் ஆகிய இரண்டுக்கும் முக்கியமானது.

ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது

கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்துள்ள உணவை உட்கொள்வதால், வளர்ந்து வரும் கருவுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வழங்க ரத்தம் மற்றும் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியின் அளவு மிக வேகமாக அதிகரிக்கிறது. கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து அளவு குறைவாக இருந்தால், அது முன்கூட்டிய பிறப்பு, குறைந்தயின் பிறப்பு எடை மற்றும் குழந்தைகளில் பலவீனமான நடத்தை மற்றும் அறிவாற்றல் செயல்பாடு ஆகியவற்றின் அபாயத்தை உயர்த்துகிறது.

தசையை மேம்படுத்துகிறது

உடலின் தசைகளுக்குப் போதுமான அளவு  தசை வலிமை மற்றும் நெகிழ்ச்சிக்குத் தேவையான அளவு ஆக்ஸிஜனை இரும்புச் சத்து வழங்குகிறது. இது விளையாட்டு வீரர்களின் சகிப்புத்தன்மைக்கு நன்மை பயக்கும். அதோடு, இது அவர்களின் தடகளச் செயல்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. குறைந்த இரும்பு அளவு தசைப் பலவீனத்தை ஏற்படுத்துகிறது.

சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கிறது

உடலில் மிகக் குறைந்த அளவு மட்டுமே இரும்புச் சத்து இருந்தால், அது தூக்கப் பழக்கத்தைப் பாதிக்கும். தூக்கமின்மை மற்றும் ஸ்லீப் மூச்சுத்திணறல் போன்ற தூக்கப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தூக்கமின்மை பிரச்னையோடு இருக்கிறீர்கள் என்றால், இரும்புச் சத்து உங்களுக்கு குறைவாக இருக்கலாம்.

அதிகப்படியான இரும்புச் சத்து

உணவு மற்றும் வாய்வழி இரும்பு சப்ளிமெண்ட்ஸ் மூலம் போதுமான அளவு இரும்புச்சத்தைப் பெறலாம். சப்ளிமெண்ட்ஸ் வடிவத்தில் இரும்புச்சத்து அதிகமாக உட்கொள்வது வயிற்று வலி, உறுப்புச் செயலிழப்பு, உட்புற ரத்தப்போக்கு, வலிப்பு தாக்கம், மரணம் போன்ற மோசமான பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

பெரியவர்களுக்கு இரும்புச் சத்துக்களின் பரிந்துரைக்கப்பட்ட அளவு ஒரு நாளைக்கு 60 முதல் 120 மி.கி ஆகும். ஆதலால், இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டு உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

இரும்புச் சத்துக் குறைபாட்டின் அறிகுறிகள் 

 கிறுகிறுப்பு, சோர்வு, மயக்கம், மூச்சுத் திணறல் போன்றவை இரும்புச் சத்துக் குறைபாட்டின் சில அறிகுறிகள். அதோடு வெளிர் சருமமும் இரும்புச் சத்துக் குறைபாட்டுக்கான ஓர் அறிகுறி.

ஒரு நாளைக்கு தேவையான இரும்புச் சத்து 

ஒரு நாளைக்கு தேவையான இரும்புச் சத்து

இரும்புச் சத்து நிறைந்த உணவுகள்  

* இச்சத்து பெரும்பாலும் உணவில் கிடைக்கும். ஆடு, கோழி, மீன், கருவாடு ஆகிய உணவில் கிடைக்கும். இவை இரும்புச்சத்து மிக்கவை. ஈரல், இறைச்சி, மீன் என்பன ஈம் இரும்புச்சத்து கொண்ட உணவுகளாகும்.

* அனைத்து வகைக் கீரை வகைகள், பாகற்காய், சுண்டக்காய், கொத்தவரை போன்ற காய்கள்.

* பேரிச்சம்பழம், உலர் திராட்சை, வெல்லத்தில் அதிக இரும்புச்சத்து உள்ளது அவரை, சோளம், கேழ்வரகு, கம்பு, கொள்ளு, எள்ளு, சோயா, காராமணி, பட்டாணி, மொச்சை, முதலான தானியங்கள்.

*  பருப்பு வகைகள்

* பப்பாளி, மாதுளம் பழம், சப்போட்டா, தர்பூசணி, அன்னாசிப்பழம் போன்ற பழங்கள்.

* பால், முட்டை முதலான உணவுகளில் ஈம் அல்லாத இரும்பு காணப்படும்..

இரும்புச் சத்து தூண்டப்படும் காரணிகள்  

இரும்புச்சத்து தூண்டப்பட வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 போன்ற பிற உணவுப் பொருட்களின் துணை அவசியம். எலுமிச்சைப்பழம் இரும்புச்சத்து அகத்துறுஞ்சப்படுதலைக் கூட்டும். விலங்குப்புரதத்திலுள்ள சிஸ்டினும் இரும்புச்சத்து அகத்துறுஞ்சப்படுதலை அதிகரிக்கும்.

இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும் உணவுகள் 

சிட்ரஸ் பழங்கள் – ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி, பெர்ரி, கிவி பழம், முலாம்பழம், பச்சை இலைக் காய்கறிகள், குடைமிளகாய்.

இரும்புச் சத்தை மந்தப்படுத்தும் காரணிகள்

தேநீரில் உள்ள தானின், கால்சியம் எனும் சுண்ணம்பு சத்து, பாலிபீனால், பைற்றெற்று, ஒக்சலேற்று மற்றும் சில தானியங்களில் உள்ள வேதிப்பொருட்கள் இரும்பு உறிஞ்சப்படுவதை மந்தமாக்குகின்றன.

இரும்புச் சத்து உறிஞ்சுதலைக் குறைக்கும் உணவுகள் 

தேநீர், சிவப்பு ஒயின் (ஆல்கஹால்), பால் அல்லது சீஸ் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகள்.

கிறுகிறுப்பு, சோர்வு, மயக்கம், மூச்சுத் திணறல் போன்றவை இரும்புச் சத்துக் குறைபாட்டின் சில அறிகுறிகள். அதோடு வெளிர் சருமமும் இரும்புச் சத்துக் குறைபாட்டுக்கான ஓர் அறிகுறி.

 

மகாலட்சுமி முருகேசன்
சீனியர் கிளினிக் டயட்டீசியன்
காவேரி மருத்துவமனை, திருச்சி

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801