பெண்களும் புற்றுநோய்களும் – ஆபத்தில் இருப்பது யார்?

பெண்களும் புற்றுநோய்களும் – ஆபத்தில் இருப்பது யார்?
December 30 04:13 2024 Print This Article

பல ஆண்டுகளாகவே, பெண்களைத் தாக்கும் புற்றுநோய்கள் அவ்வளவாக வெளியில் தெரியாமல் ‘அமைதியாக’ இருந்தன. இந்தப் புற்றுநோய்கள் எளிதில் தடுக்கக்கூடிய அல்லது கண்டறிய முடியாதபடி ஒளிந்தே காணப்பட்டன. சிகிச்சை பெறும் வாய்ப்புகள் தாமதமாகும் வரை இவற்றைக் கண்டறிவதும் கடினமாகவே இருந்தது.

நவீன சோதனை முறைகள் (ஸ்கிரீனிங்) மற்றும் மரபணுக் கண்டுபிடிப்புகளின் வருகை காரணமாக, புற்றுநோய்களைக் கண்டறிதல் சாத்தியமாகியுள்ளது. அதோடு, பல வகையான மகளிர் புற்றுநோய்களைத் தடுக்க முடியும் என்றும் மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் கண்டறிந்துள்ளனர்.

நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்களா?

பெண்ணோயியல் புற்றுநோய் என்பது ஒரு பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளில் தொடங்கும் புற்றுநோய்களைக் குறிக்கிறது. எனவே, எந்தவொரு பெண்ணுக்கும் புற்றுநோய் உருவாகும் அபாயம் உள்ளது.

முக்கியமான ஆபத்துக் காரணிகள்

குடும்ப வரலாறு

கருப்பைப் புற்றுநோய்க்கான வலுவான அறியப்பட்ட ஆபத்துக் காரணி குடும்ப வரலாறு. கருப்பைப் புற்றுநோயின் ஐந்தில் ஒன்று, பிஆர்சிஏ1 மற்றும் 2 போன்ற கருப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்படக்கூடிய மரபணுக்களில் ஏற்படும் பிறழ்வுகளால் ஏற்படுகிறது. இவை தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகின்றன.

எண்டோமெட்ரியல் புற்றுநோய் சில குடும்பங்களில் தொடர்ந்து காணப்படுகிறது. பெரும்பாலும் இது லிஞ்ச் நோய்க்குறியுடன் தொடர்புடையது. லிஞ்ச் சிண்ட்ரோம் என்பது ஒரு பரம்பரை புற்றுநோய் நோய்க்குறி. இது எண்டோமெட்ரியல், கருப்பை மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.

உடல் பருமன்

இந்தியாவில் உடல் பருமன் அதிகரித்து வருவதால், மருத்துவர்கள் குறிப்பாக எண்டோமெட்ரியல் புற்றுநோயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளனர். உடல் பருமன் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது; நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்துகிறது. இது கருப்பையின் புறணியை (எண்டோமெட்ரியம்) பாதித்து, புற்றுநோயின் அதிக ஆபத்துக்கு வழிவகுக்கும்.

வயது

பெரும்பாலான மகளிர் புற்றுநோய்களுக்கு, 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஆபத்து அதிகமாக உள்ளது.

HPV 

HPV என்பது பாலியல் ரீதியாக பரவும் நோயாகும். இது மகளிர் புற்றுநோயுடன் மிகவும் வலுவான உறவைக் கொண்டுள்ளது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் பெரும்பாலான பாதிப்புகள் HPV வைரஸ் காரணமாகவே ஏற்படுகின்றன. இந்த வைரஸ் பிறப்புறுப்பு மற்றும் வால்வார் புற்றுநோயையும் ஏற்படுத்தும்.

புற்றுநோயைத் தடுக்க என்ன செய்யலாம்

பரிந்துரைக்கப்பட்ட பரிசோதனைகள் மற்றும் தடுப்புக்காக கிடைக்கக்கூடிய தடுப்பூசிகள் போன்றவற்றுக்கு உட்பட்டு, மகளிர் புற்றுநோய்களுக்கான அபாயங்களைக் குறைப்பதும், ஆரம்பத்திலேயே அறிவதும் மிகவும் முக்கியம்.

பாப் சோதனைகள் (Pap) 

பாப் சோதனை என்பது மிகவும் மதிப்புமிக்க கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைக் கருவி. குறிப்பாக HPV சோதனையுடன் இணைக்கப்படும்போது பாப் சோதனைகள் புற்றுநோயாக மாறுவதற்கு முன்பு கர்ப்பப்பை வாயில் ஏற்படும் மாற்றங்களை முன்கூட்டியே கண்டறிய வழிவகுக்கும்.

21 முதல் 29 வயதுடைய பெண்களுக்கு, ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒருமுறை பாப் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது.

30 மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு, HPV சோதனையுடன் இணைந்து பாப் சோதனைகள் (கோ-டெஸ்டிங் எனக் குறிப்பிடப்படும்) ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பரிந்துரைக்கப்படுகிறது.

65 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஆபத்து குறைவு எனக் கருதினால், சோதனைகள் நிறுத்தப்படலாம்.

ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை

உடல் பருமனே எண்டோமெட்ரியல் புற்றுநோய்க்கான குறிப்பிடத்தக்க ஆபத்துக் காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையைப் பராமரிப்பது முக்கியம். ‘மா காவேரி’யில் பிரத்யேகமான உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை அமர்வுகளை வழங்குகிறோம்.

மரபணு சோதனை

பல அறிகுறிகளைப் பொறுத்து மரபணு ஆலோசனை மற்றும் சோதனை வழங்கப்படுகிறது. பெண்கள் தங்கள் குடும்ப வரலாற்றை மருத்துவரிடம் தவறாமல் கூற வேண்டும். பொதுவாக, குடும்பத்தில் யாருக்கேனும் கர்ப்பப்பை புற்றுநோய் அல்லது மாதவிடாய் நிற்கும் முன் மார்பகப் புற்றுநோய் (45 வயதிற்கு முன்), அதே போல 50 வயதிற்கு முன் எண்டோமெட்ரியல் அல்லது பெருங்குடல் புற்றுநோய் வரலாறு உள்ள பெண்கள், மரபணு ஆலோசகரை ஆலோசிக்க வேண்டும்.

HPV தடுப்பூசி

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதில் HPV தடுப்பூசி ஒரு மதிப்புமிக்க கருவியாக இருந்து வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு முக்கிய ஆய்வில், இந்தத் தடுப்பூசி டீன் ஏஜ் பெண்களில் HPV விகிதத்தை 63 சதவிகிதமும், 20 முதல் 24 வயதுடைய பெண்களில் 34 சதவிகிதமும் குறைத்துள்ளது.

HPV தடுப்பூசி 11 முதல் 26 வயது வரையிலான ஆண்களுக்கும் பெண்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.

அறிகுறிகளை அறிவது அவசியம்

மகளிர் புற்றுநோயின் பல அறிகுறிகளை பெண்கள் கவனிக்க முடியும்.

அசாதாரண ரத்தப்போக்கு, இடுப்பு வலி மற்றும் வீக்கம் உள்பட சில அறிகுறிகள் கவனத்துக்கு உரியவை. இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, இவை பெரும்பாலும் மற்ற, மிகவும் தீங்கற்ற நிலைமைகளின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். அதனால், இந்த அறிகுறிகள் ஏற்பட்டாலே கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் மேற்கண்ட அறிகுறிகளை உணர்ந்தவுடன், உங்கள் மருத்துவரிடம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்

அசாதாரண ரத்தப்போக்கு (உங்கள் மாதவிடாய் காலத்துடன் தொடர்பில்லாத ஏதேனும் பிறப்புறுப்பு ரத்தப்போக்கு), இயல்பை விட கனமான மற்றும்/அல்லது நீண்ட மாதவிடாய் ரத்தப்போக்கு, மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு, உடலுறவின் போது வலி மற்றும் ரத்தப்போக்கு.

எண்டோமெட்ரியல் புற்றுநோய்

அசாதாரண ரத்தப்போக்கு, மாதவிடாய் நின்ற பின் ரத்தப்போக்கு, கடினமான அல்லது வலிமிகுந்த சிறுநீர் கழித்தல், உடலுறவின் போது வலி, இடுப்புப் பகுதியில் வலி அல்லது கட்டி அல்லது இரண்டுமே ஏற்படுதல்.

கர்ப்பப்பை புற்றுநோய்

 அடிவயிற்றில் வீக்கம் அல்லது வீங்கிய உணர்வு, பசியின்மை, வாயு, அஜீரணம், குமட்டல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அசாதாரண பிறப்புறுப்பு ரத்தப்போக்கு

வால்வார் புற்றுநோய்

தொடர்ந்து அரிப்பு, பிறப்புறுப்பின் நிறத்தில் மாற்றம், மாதவிடாய்க்குத் தொடர்பில்லாத ரத்தப்போக்கு அல்லது வெள்ளப்படுதல், உணரக்கூடிய முடிச்சு, கட்டி அல்லது புண்.

ஆபத்துக் காரணிகளை அறியுங்கள்

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பராமரித்தல், வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ளுதல், சாத்தியமான அறிகுறிகளை அறிதல் ஆகியவை மகளிர் புற்றுநோய்களைத் தடுக்கவும் கண்டறியவும் உதவும்.

‘மா காவேரி’யில் புற்றுநோய் பரிசோதனையுடன் கூடிய முழுமையான மகளிர் சுகாதார மதிப்பீட்டுத் தொகுப்பை வழங்குகிறோம். இங்கு அனைத்து நாட்களும் செயல்படக்கூடிய ஒரு பிரத்யேக நோய்த்தடுப்பு கிளினிக் உள்ளது. HPV தடுப்பூசி இங்கு செலுத்தப்படுகிறது.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பராமரித்தல், வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ளுதல், சாத்தியமான அறிகுறிகளை அறிதல் ஆகியவை மகளிர் புற்றுநோய்களைத் தடுக்கவும் கண்டறியவும் உதவும்.

 

Dr. V. உமா மகேஸ்வரி MBBS, DGO, MD
மகப்பேறியல் & பெண்ணோயியல் மருத்துவர்
மா காவேரி மருத்துவமனை, திருச்சி

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801