நீங்களே வாங்கும் மருந்துகளில் ஒளிந்திருக்கும் அபாயம்

நீங்களே வாங்கும் மருந்துகளில் ஒளிந்திருக்கும் அபாயம்
May 28 07:05 2024 Print This Article

வலி மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏன் தெரியுமா?

நோயாளிக்கு வலி மருந்துகளால் சிறுநீரகம், ஈரல், மற்ற உறுப்புகள் பாதிக்கப்படவில்லை என்பதை முகத்தை, கால்களை, உடலைப் பார்த்தே சந்தேகப்படுவது… அதோடு, ரத்தப் பரிசோதனை (Clinical Diagnose) மூலம் அவ்வப்போது வலி நிவாரணிகளாலும் மற்ற நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகளாலும் சிறுநீரகம், ஈரல், இரைப்பைக்கு ஏற்படும் பாதிப்புகளையும் பக்க விளைவுகளையும் மருத்துவர் உறுதி செய்துகொள்வது வழக்கம்.

NSAID (NON Steroidal Anti Inflammatory Drugs) எனப்படும் வலி நிவாரணிகள் அனைத்துத் துறை மருத்துவர்களாலும் அதிகம் எழுதப்படும் மருந்துகளில் ஒன்று. இந்த மருந்துகளே மருந்துக் கடைகளில் ப்ரிஸ்க்ரிப்ஷன் மருத்துவரின் இல்லாமல் மிக அதிகமாக (Schedule H) விற்பனை செய்யப்படுகின்றன.

வலி வந்த பிறகு எப்படியாவது அந்த வலியைப் போக்குவதற்கு யார் என்ன கொடுத்தாலும் சாப்பிட்டு வலியைப் போக்கிக் கொள்ள மட்டுமே தோன்றும். ஆனால், Indian drugs & Cosmetics Act

படி(rules 65-97) இவை Schedule H என்ற பிரிவின் கீழ் மருத்துவரின் பரிந்துரையின் கீழ் மருந்துச் சீட்டில் மட்டுமே தரப்பட வேண்டும்.

சிறந்த வலி நிவாரணிகளாக இருந்தாலும் எடுத்ததற்கெல்லாம் அவற்றை உட்கொள்ளக்கூடாது. அடிபட்டதாலோ, இடித்துக்கொண்டதாலோ, விழுந்ததாலோ ஏற்படும் காயம், அசைக்க முடியாத கை, கால், இடுப்பு வலி, சுளுக்கு என நம் இயல்பான வாழ்க்கைக்குத் தடையாக இருக்கும் இயலாமைக்கு மட்டுமேயான வலி மருந்துகளுக்குக்கூட மருத்துவரின் ஆலோசனை பெறுவதே சரி. சராசரியாகவே பத்தில் நான்கு பெண்கள் (30, 35 வயதுக்கு மேற்பட்டோர்) மருத்துவரை அணுகுவது காரணம் இல்லாத வலிகளுக்குத்தான். மன அழுத்தம், தாங்கமுடியாத பொருளாதாரப் பிரச்சினைகள்,உறவுகளுக்கு இடையிலான சச்சரவுகள் மற்றும் நாளைய பிரச்சினைகள் பற்றிய பயம் போன்ற உள்ளுணர்வுகளும், உடல் வலியாக (Psychosomatic pain) உணரப்பட்டு சித்தரிக்கப்படுகின்றன.உடல் வலி மருந்துகள் ஒவ்வொன்றுக்கும் என்று தனித்தனியாக ஒரு நாளுக்கான அளவுகள், உட்கொள்ளும் ஒரு வேளைக்கான அளவுகள் மருந்துக்கு மருந்து மாறுபடும். சில மருந்துகள் 50mg இருக்கும். ஒரு வேளை அளவு(dosage) சில மருந்துகளுக்கு 400mgம் ஒருசில மருந்துகளுக்கு 100mg எனவும் இருக்கும். வலி மருந்துகள் அனைத்தும் தனியாகவோ, பாரசிட்டமால் சேர்த்தோ தரப்படுகின்றன.

வலி மருந்துகளை முக்கியமாக வெறும் வயிற்றில் தண்ணீர் இல்லாமல் உட்கொள்ளும்போது உணவுக்குழாய் புண்ணானால் நெஞ்செரிச்சலும், இரைப்பை புண்ணானால் வயிற்றுவலியும், புண் ஆழமானால் ரத்தக்கசிவும் ஏற்படலாம். ஒரு வேளைக்கான, ஒரு நாளுக்கான வலி மருந்துகளை அளவைத் தாண்டி எடுத்துக் கொள்ளக் கூடாது. பல்வேறு வலி மருந்துகளைச் சேர்த்தும் எடுத்துக் கொள்ளக்கூடாது.

வலி மருந்துகள் எல்லா உறுப்புகளிலும் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். எந்த விளைவையும் ஏற்படுத்தாமல் ஒத்துக் கொள்ளும் பெரும்பாலானவர்களுக்குப் பிரச்னை இல்லை. ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் ஈரல், சிறுநீரகம், நுரையீரல், உணவுக் குழாய், ரத்தம் மற்றும் தோல் என எல்லா உறுப்புகளிலுமே பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

வலி மருந்துகளுக்கு என்று மிக மோசமான பக்க விளைவுகள் உண்டு. முக்கியமாக வயிற்றுவலி, இரைப்பைப் புண், குடல்புண், தோல் அலர்ஜி மற்றும் உயிரைக் கொல்லக்கூடிய உடனடியாக மருத்துவ உதவியை நாடக்கூடிய ஷாக் (Anaphylactic shock) போன்ற பக்கவிளைவுகளும் வரலாம்.

சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம். பயப்பட வேண்டாம். இது யாருக்கு ஒப்புக் கொள்ளவில்லையோ அவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆகவே முதல் முறை ஒவ்வாமை ஒரு மருந்துக்கு ஏற்படும்போது அந்த மருந்தின் வேதிப் பெயரை எழுதி வாங்கி வைத்துக் கொள்வது, பிறகு மருத்துவரிடமோ, மருந்தாளுநரிடமோ, மருத்துவமனை பணியாளர்களிடமோ, அதைச் சொல்லுவது அவசியம். நோயாளிகள் மருந்தின் அலர்ஜி பற்றி தெரிந்தும் சொல்லாமல் விட்டால் அது நோயாளியின் தவறு. சொல்லியும் மருந்து தரப்பட்டால் தருபவர் மீது தவறு. தவறு யாருடையதாக இருந்தாலும் ஒவ்வாத மருந்தை மீண்டும் எடுத்துக்கொண்டால் நோயாளிகளுக்குப் பக்க விளைவுகள் மிக மோசமாகலாம்.

வலி மருந்துகளை ரத்தக் கொதிப்பு மருந்துகளுடன் உட்கொள்ளும்போது ரத்தக் கொதிப்பைக் குறைக்கும் திறன் குறையும். இவ்விரு மருந்துகளுக்கும் இடைவெளி அவசியம்.

வலி மருந்துகளைக் கர்ப்பிணிகளுக்குத் தரவே கூடாது. முதல் மூன்று மாதங்களுக்குக் கர்ப்பிணிகளுக்கு அவ்வாறு தரும்போது அன்னப்பிளவு (cleft plate) என்ற பிளவுற்ற மேல்தாடை நோய் குழந்தைகளுக்கு ஏற்படலாம். மருத்துவர்கள் இதில் கவனத்துடன் இருப்பார்கள். ஆனால், மற்றவர்கள் தரும்போது குழந்தைகளுக்கு வலி மருந்துகளில் சில மருந்துகளே பரிந்துரைக்கப்பட்டுள்ளன. முதியோருக்கு அதற்கு முன் ஒத்துக்கொண்ட மருந்துகளை அதே அளவில் உட்கொண்டால்கூட கை, கால்களில் வீக்கம், முகத்தில் வீக்கம் என வருமானால் சிறுநீரகமும் ஈரலும் பாதித்திருக்கின்றன என்று அர்த்தம். இதை மருத்துவரிடம் உடனடியாகத் தெரிவிப்பதும் வலி மருந்துகளைத் தவிர்ப்பதும் அவசியம்.

வலிக்கு நிவாரணம் கிடைத்துவிட்டால் பலரும் மருத்துவரை அணுகுவதை தவிர்த்துவிடுகிறார்கள். இதனால் சில சருமக் கட்டிகள் மருந்துகளால் குணமாவதைத் தாண்டி அறுவை சிகிச்சை நோய்களாக மாறிவிடுகின்றன. நெஞ்சுவலி போன்ற நோய்களுக்கு வலிநிவாரணி எடுத்துக்கொண்டு மாரடைப்பு போன்ற மீள முடியாத இழப்புகளும் ஏற்படுகின்றன. சரும அலர்ஜி முதல் உறுப்புகள் செயல் இழப்பு வரை எதுவும் ஏற்படலாம். உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகமிக முக்கியம்.

சுய மருத்துவம் செய்துகொள்ளும்போது வலி மருந்துகளால் வலி குணமடைந்து நிவாரணம் அடைந்தாலும் மருத்துவரை ஆலோசித்து வலிக்கான காரணங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.

உணவையும் உறக்கத்தையும் முறைப்படுத்தி அன்றாடம் உடற்பயிற்சி செய்தால் வலிநிவாரணிகளைத் தேட வேண்டியது இருக்காது!

சிறுநீரகங்களைச் சேதப்படுத்தும்!

 அதிக அளவு வலிநிவாரணி மாத்திரைகளை தொடர்ந்து எடுப்பது தற்காலிக அல்லது நிரந்தர சிறுநீரகச் செயலிழப்புக்கு வழிவகுக்கும். சிறுநீரகத்தின் அழுத்தத்தைப் போக்க, வலி நிவாரணிகளை உட்கொள்ளும்போது நிறைய தண்ணீர் குடிக்கவும்; மதுவை தவிர்க்கவும்.

10 நாட்கள் வரை வலிநிவாரணிகளை உட்கொள்வதே சிறுநீரகப் பிரச்சினைகள் ஏற்படாமல் அவற்றை உட்கொள்ளக்கூடிய அதிகபட்ச அளவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் வலி 10 நாட்களுக்கு மேல் நீடித்தால், நீங்கள் மருத்துவரை அவசியம் அணுக வேண்டும்.

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801