by admin-blog-kh | June 20, 2024 4:50 am
நம் உடலில் எலும்பு மஜ்ஜை என்ற உறுப்பில்தான் ரத்த அணுக்கள் உற்பத்தி ஆகின்றன. அதில் ஏதேனும் கோளாறு ஏற்படும்போது கீமோதெரபி அல்லது ரேடியோ தெரபி கொடுத்து, சேதமடைந்த எலும்பு மஜ்ஜையைச் செயலிழக்கச் செய்கிறோம். பிறகு, ஆரோக்கியமான செல்களை மற்றவர்களிடமிருந்து எடுத்து நோயாளிக்குச் செலுத்தி, அந்த செல்களை நோயாளியின் உடலில் செயல்பட செய்து, நோயாளிக்கு இருக்கக்கூடிய நோயை குணப்படுத்துவதுதான் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை.
– ஆரோக்கியமான ஸ்டெம் செல் வேண்டும்.
– HLA பரிசோதனை மூலமாக தானம் அளிக்க தகுதியுடையவர்களைக் கண்டறியலாம்.
– நோயின் தாக்குதல் மருத்துவரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். ஸ்டெம் செல் தானம் அளிப்பவரும் ஆரோக்கியமாக இருக்கிறாரா எனச் சோதிக்க வேண்டும்.
– பரிசோதனைகளை முடிந்த பின் நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்து, கீமோதெரபி அல்லது ரேடியோ தெரபி கொடுத்து எலும்பு மஜ்ஜையைச் செயலிழக்க செய்ய வேண்டும்.
– தானம் செய்பவருக்கு சில ஊசிகளைச் செலுத்தி, அவர்களின் உடலிலிருந்து பாதுகாப்பாக ஸ்டெம் செல்லை அகற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
– அந்த ஸ்டெம் செல்லை நோயாளிக்குச் செலுத்திய பிறகு, அவை ஆரோக்கியமாகச் செயல்பட 2-3 வாரங்கள் எடுத்துக் கொள்ளும். அந்த 2-3 வாரங்களுக்கு நோயாளியைப் பாதுகாப்பாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை அறையில் பராமரிக்க வேண்டும்.
– இதன் பின் நோயாளி விரைவிலேயே குணமடைந்து வீடு திரும்பலாம்.
எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையில் இரண்டு வகைகள் உள்ளன.
Allogeneic (அலோஜெனிக்) என்பது ஆரோக்கியமான ஒருவரிடமிருந்து ஸ்டெம் செல் எடுத்து நோயாளிக்கு செலுத்துவது ஆகும்.
Autologous (தன்னியக்கமானது) என்பது நோயாளியுடைய ஸ்டெம் செல்லை எடுத்து Cryopreservation Technic மூலமாக Freeze செய்து வைத்து, அதற்கு பின் நோயாளிக்கு தேவையான கீமோதெரபி கொடுத்துவிட்டு, பிறகு அந்த Freeze செய்து வைத்த ஸ்டெம் செல்லை நோயாளிக்கு செலுத்தி மீண்டும் செயல்முறைப்படுத்துவதற்கு Autologous (தன்னியக்கமானது) என்று பெயர்.
ரத்தப் புற்றுநோய் உள்ளவர்களுக்கு பொதுவாக கீமோதெரபி சிகிச்சை அளிப்போம். பெரும்பாலான நோயாளிகள் கீமோதெரபி மூலம் குணமடைந்து வீடு திரும்புவார்கள். சில அதிக ஆபத்துள்ள லுகேமியா ரத்த புற்றுநோய் உண்டு. அதாவது கீமோதெரபி சிகிச்சையின் மூலம் சாதாரணமாக மாறி மீண்டும் தோன்றுவது… அதை Relapse Leukemia என்று சொல்லுவோம். அதேபோல சாதாரணமாகக் கொடுக்கக்கூடிய கீமோதெரபிக்கு சரியாகாமல், நோய் சரியாகாமல் இருப்பது… அதை Refractory Leukemia என்று சொல்வோம்.
இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை முறையை பரிசீலனை செய்வோம். மேலும், எலும்பு மஜ்ஜை செயலிழப்பு (Aplastic Anemia) என்று ஒரு நோய் இருக்கிறது. அதாவது எலும்பு மஜ்ஜை செயலிழந்து ரத்த அணுக்கள் குறைந்துகொண்டே இருக்கும். அதனால், அடிக்கடி ரத்தம் ஏற்றிக் கொண்டே இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். அடிக்கடி நோய்தொற்று, ரத்தக் கசிவு போன்ற தொந்தரவுகளும் ஏற்படக்கூடும். அப்படி இருக்கும் பட்சத்தில், மீண்டும் எலும்பு மஜ்ஜை செயல்பட வேண்டுமென்றால்,
Allogeneic (அலோஜெனிக்) எனும் எலும்பு மஜ்ஜை சிகிச்சை முறைக்கு பரிந்துரைக்கலாம்.
குழந்தைகளில் சிலருக்கு மரபணு பிரச்னைகள் இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக தலசீமியா (Thalassemia), அரிவாள் செல் அனீமியா (Sickle Cell Anemia), ஃபேன்கோனி அனீமியா
(Fanconi anemia), சேமிப்பு கோளாறு (Storage Disorder), ஆஸ்டியோ பெட்ரோசிஸ்(Osteopetrosis), இம்யூனோ குறைபாடு(Immuno Deficiency)… இதுபோன்ற மரபணு சார்ந்த சில நோய்களுக்கு, எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே நிரந்தரமான தீர்வை அளிக்கும்.
Autologous (தன்னியக்கம்) என்பது ரத்தப் புற்றுநோய் அல்லாத Solid Tumors பிரச்னைகளுக்கு உதவும். உதாரணமாக Lymphoma, Neuroblastoma… இதுபோன்ற அதிகப் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் Autologous சிகிச்சை முறையை நோயாளிக்குப் பரிந்துரைப்போம். தற்போதைய காலகட்டத்தில் மருத்துவ அறிவியலில் வேகமாக வளர்ந்து வரும் முன்னேற்றங்களில் ஒன்று மாற்று அறுவை சிகிச்சை நுட்பமாகும்.
நோயாளியுடன் HLA ஒத்துப்போகக்கூடிய ஒருவர் கிடைத்தால் மட்டுமே, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும். பொதுவாக நோயாளியுடன் HLA 10/10 பொருத்தமாகவும், 12/12 பொருத்தமாகவும் இருக்கக்கூடியவர்களுக்கு பொருத்தமான எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்வோம். ஆனால், இப்போதைய நவீனத் தொழில்நுட்பத்தில், HLA ஒத்துப்போகவில்லை என்றாலும், HLA அரைப் பொருத்தம் இருக்கக்கூடிய நோயாளியின் பெற்றோர், குழந்தைகள், உடன் பிறந்தவர்களில் இருந்து T-Cell Depletion, Post Transplant
Cyclophosphamide Technique என்ற சில தொழில்நுட்பங்கள் மூலமாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்ய முடியும்.
இவை ஒரு நீண்ட செயல்முறை. GVHD Reaction, Viral Infection வராமல் இருப்பதற்கு சில நோய் எதிர்ப்பு மருந்துகள் கொடுத்து நோயாளி குணமடைந்து வீட்டிற்குச் செல்லும் வரை சுத்தமான சூழ்நிலையில் பார்த்துக் கொள்ள வேண்டும். நோயாளி வெற்றிகரமாக சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்பும், அடுத்த 3-6 மாதங்களுக்கு மருத்துகள் கொடுத்து கண்காணிக்க வேண்டும். நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்ப மருந்துகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அவர் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்.
உதாரணமாக… மூன்று வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்தோம். இப்போது அந்தக் குழந்தை பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறார். அதேபோல வயதானவர்கள் (60-70 வயதில்) கூட சிகிச்சை பெற்று மீண்டும் சாதாரண வாழ்க்கைக்கு திரும்புகிறார்கள். ஆகவே, அனைத்து வயதினருக்கும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து, மீண்டும் அவர்கள் அன்றாட வாழ்க்கையை தொடர முடியும்!Highlights : நம் உடலிலுள்ள எலும்பு மஜ்ஜை என்ற உறுப்பில்தான் ரத்த அணுக்கள் உற்பத்தி ஆகின்றன.
Dr. Vinod Gunasekaran,
Consultant – Paediatric Hematology, Oncology & Bone Marrow Transplantation
Kauvery Hospital Trichy – Cantonment
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801
Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/what-is-a-bone-marrow-transplant/
Copyright ©2025 Kauvery Blog unless otherwise noted.