உணவே மருந்து – ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உவப்பான பானம்!

by admin-blog-kh | May 9, 2023 8:10 am

பாலில் என்ன  சத்துக்கள் உள்ளன ? 

பால் மிகச்சிறந்த ஒரு சத்துணவு. புரதம், கால்சியம்,வைட்டமின் பி (குறிப்பாக ரிபோ ஃபிளேவின்), வைட்டமின் டி என எல்லாச் சத்துக்களும் பாலில் உள்ளன. இரும்புச்சத்தும், வைட்டமின் சி சத்தும் மட்டும் கொஞ்சம் குறைவு. பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை எல்லோருக்கும் பால் அவசியம். குழந்தைகளுக்கு அடிப்படை உணவான பால், வயதானவர்களுக்கு சப்ளிமென்ட் உணவு.

பாலின் வகைகள் 

தாய்ப்பால்[1], பசும்பால், எருமைப்பால், கொழுப்பு நீக்கிய ஸ்கிம்டு மில்க் என பாலை 4 வகைகளாகப் பிரிக்கலாம். தாய்ப்பாலில் ‘கேசின்’ எனப்படுகிற புரதச்சத்து குறைவு. அது பசும்பாலில் அதிகம். எருமைப்பாலில் கொழுப்புச்சத்து அதிகம். ஸ்கிம்டு மில்க்கில் புரதச்சத்து அதிகம்… கொழுப்புச்சத்து குறைவு. ஸ்கிம்டு மில்க்தான் எல்லோருக்கும் உகந்தது.

சைவ உணவைப் பின்பற்றுகிறவர்களுக்கு பால்தான் பேலன்ஸ்டு உணவு. ஒருநாளைக்கு ஒருவருக்கு சராசரியாக 250 மி.லி. பால் அவசியம் தேவை. பெரியவர்களானால் 150 மி.லி. பள்ளிக்கூட வயதுக் குழந்தைகள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுப்பவர்கள் போன்றோருக்கு இந்த அளவு 500 மி.லி. முதல் 1000 மி.லி. வரை அதிகரிக்கும்.

“பெண்கள் பால் குடிக்கக் கூடாது, பால் குடித்தால் உடல் பருக் கும், ஹார்ட் அட்டாக் வரும்’ என்றெல்லாம் ஆளாளுக்கு ஆயி ரம் சொல்வதைக் கேட்கிறோம். அவையெல்லாம் வதந்திகளே. உண்மையில் பாதகமில்லாத உணவு பால். பிரச்னை பாலில் அல்ல… அதிலுள்ள கொழுப்பில்தான். கொழுப்பு நீக்கிய பால் எல்லோருக்கும் உகந்தது. இதய நோய்[2] உள்ளவர்களும் பால் குடிக்கலாம்.

பாலில் இருந்து பெறப்படுகிற தயிர், மோர், வெண்ணெய், பனீர், சீஸ் போன்றவற்றில் தயிரும் மோரும் சிறந்தவை. பாலின் புளித்த வடி வமான தயிரில் உள்ள பாக்டீரி யாக்களும் லாக்டிக் அமிலமும் செரிமானத்துக்குப் பெரிதும் உதவக் கூடியவை. சிலவகை உடல் நலக் கோளாறுகளுக்காக சிகிச்சையில் இருப்பவர்களுக்கு மருந்து,மாத்திரைகள் எடுப்பதால் வயிற்று எரிச்சல், வயிற்றில் புண் போன்றவை ஏற்படலாம். அதைக் குறைக்க மறுபடி மருத்துவர்கள் வேறு மாத்திரைகளைப் பரிந்துரைப்பார்கள். மருந்துகளின் பக்க விளைவுகளையும் வீரியத்தையும் குறைப்பதில் தயிருக்கு நிகர் இல்லை. தயிர் என்றால் புளிப்பில்லாத, கொழுப்பு நீக்கப்பட்டது மட்டுமே நல்லது. தயிரா, மோரா எனக் கேட்டால் மோர்தான் சிறந்தது. பேதியாகும்போது பால் எடுக்கக் கூடாது. அந்த நேரத்தில் மோர்தான் நல்லது.

யாருக்கு என்ன பால்?

பல வீடுகளில் உபயோகிக்கிற நீல நிற ஆவின் பால் பாக் கெட்டில் இருப்பது வெறும் 3.5 சதவிகிதக் கொழுப்பு. இப்போது 2 சதவிகிதம் மட்டுமே கொழுப்பு கொண்ட பிங்க் நிற ஆவின் பால் கூடக் கிடைக்கிறது. டயட் செய்கிறவர்களுக்கு அது பெஸ்ட். ஆரஞ்சு, பச்சை நிற பாக்கெட்டெல்லாம் அதிகக் கொழுப்பு கொண்டவை என்பதால், அரிதாக பால் குடிப்பவர்களுக்கும், சராசரியை விட எடை குறைவாக உள்ளவர்களுக்கும் மட்டும் ஓ.கே.

கொழுப்பு நீக்கப்பட்ட பாலாகவே இருந்தாலும், அதைக் காய்ச்சி, முதலில் அறை வெப்பநிலைக்கு ஆற வைக்க வேண்டும். மேலே படிகிற ஆடையை நீக்கி விட்டுத்தான் உபயோகிக்க வேண்டும். அந்த பால் ஏட்டைத் தனியே சேகரித்து, வாரம் ஒரு முறை வெண்ணெயாக்கி, குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

 லேக்டோஸ் அலர்ஜி?

பால் ஒவ்வாமையைத்தான் ‘லேக்டோஸ் அலர்ஜி’ என்கிறோம். அதனால், பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால்கூட ஒப்புக் கொள்ளாது பேதி அதிகமாகும். ஒவ்வாமை உறுதி செய்யப்பட்டால், லேக்டோஸ் ஃப்ரீ பால் கொடுக்கலாம். ஒரு குழந்தைக்கு பால் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக, காலம் முழுக்க, அதற்கு பாலே கொடுக்கக் கூடாது என அர்த்தமில்லை. இடையிடையில் அதைக் கொடுத்துப் பார்த்து, அலர்ஜி இல்லாவிட்டால் தொடர்ந்து கொடுக்கலாம்.

ஃபிளேவர்டு மில்க் நல்லதா?

சாக்லெட், ஸ்ட்ராபெர்ரி, மாம்பழம் என விதம் விதமான சுவை களில் ஃபிளேவர்டு மில்க் கிடைக்கிறது. ப்ரிசர்வேட்டிவ் அதிகம் சேர்க்கப்படுவதில்லை என்பதால் இது நல்லதுதான். சர்க்கரை சேர்க்கப்பட்டிருப்பதால், நீரிழிவு மற்றும் இதய நோய்க்காரர்கள் தவிர்க்க வேண்டும்.

பால் குடிக்க அடம் பிடிக்கிறதா குழந்தை?

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai, Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

Endnotes:
  1. தாய்ப்பால்: https://kauveryhospital.com/blog/paediatrics/mothers-milk-the-liquid-gold/
  2. இதய நோய்: https://kauveryhospital.com/blog/tamil-articles/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/what-nutrients-are-there-in-milk/