மருத்துவ சிந்தனை விருந்து

சுவாசிக்கும் காற்று ஆழ்ந்து, நுரையீரலினுள் செல்ல வேண்டும்.

மதுவிற்கு அடிமையாகாதே, மதுப்பழக்கத்தால் கல்லீரல் கெடும்.

ஒரு கால்வீக்கம் உடனே கவனி,

இது யானைக்காலின் அறிகுறி.

இரு கால் வீக்கம் இப்போதே கவனி,

இது சிறுநீரக பாதிப்பின் அறிகுறி.

ஆறாத வாய்ப்புண், மார்பக கட்டி, ஐம்பது கடந்தும் பசியின்மை, அதிக உடல் எடை குறைதல்

இது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

மருத்துவரிடம் சென்று, ஆலோசனை பெறுங்கள்.

சர்கரை என்பது வியாதியல்ல,

கணைய செயல்பாட்டின் குறைபாடு என்றறிவீர்.

பிணி வந்து வருந்துவதை விட,

உடல் மொழி அறிந்து

உடல் நலம் காப்பீர்.

மன இச்சைக்கு உண்ணாமல், அவரவர் உடல் தேவையறிந்து

உண்டால் உணவே அருமருந்தாகும்,

இல்லையேல் மருந்தே உணவாக மாறும்.

உடல், மனம், ஆன்மா இவை காக்க பயில்வீர் யோகம்,

இதனால் கிடைக்கும் ஆரோக்கியம், அமைதி, தெளிவு இதை அறிந்தால் உன் வாழ்வு சிறப்பு.

 

GK. Balasubramani
Balasubramani
Senior Physiotherapist

Kauvery Hospital