கருணையின் வடிவமே தானம்

மனிதப் பிறப்பே உயர்வானது,

மனிதம் என்பது கருணை.

கருணை உள்ளோரே,

சக மனிதனின் கஷ்டம் அறிந்தவன்.

அழிந்து போகும் இவ்வுடலை, நோயுற்று வாழ்பவரின்

உடல் நலத்திற்காக,

உறுப்பு தானம் செய்வோம்.

தானம் செய்து,

தானம் பெறுபவரின் மகிழ்ச்சியில் இன்பம் காண்போம்.

மண் தின்று,

எரிந்து சாம்பலாகும் உடலை,

மானுடம் காக்க உடல் உறுப்பு தானம் செய்வோம்.

மனிதன் இறந்த பின்பும்,

உடல் உறுப்புகள் சில மணி நேரம் உயிர்ப்புடன் இருக்கும்,

இறந்தபின்,

இதயம் (Heart) – 4-6 மணி நேரம் வரையிலும்,

சிறுநீரகம் (Kidney) – 24-36 மணி நேரம் வரையிலும்,

கல்லீரல் (Liver) – 12-24 மணி நேரம் வரையிலும்,

நுரையீரல் (Lungs) – 4-6 மணி நேரம் வரையிரலும்,

கணையம் (Pancreas) – 12-18 மணி நேரம் வரையிலும்,

கண் விழித்திரை (Cornea) – 6-12 நாள்கள் வரையிலும்,

எலும்பு மஜ்ஜை (Bone Marrow) – 12-24 நாள்கள் வரையிலும்,

தோல் (Skin) – 6-12 நாள்கள் வரையிலும் உயிர்ப்புடன் இருக்கும்.

கண் தானம் செய்வதால் பிறருக்கு விழித்தந்து,

அவருள் நம்மை காண்போம்.

இதய தானம் செய்து,

அடுத்தவரின் உடலின் நம் பந்தம் உயிர்ப்புடன் துடிப்பதைக் கண்டு பேரின்பம் கொள்வோம்.

சிறுநீரகம் தானம் செய்து, அவருக்குள் நாம் இருப்போம் என்று மகிழ்ச்சி கொள்வோம்.

இவ்வாறே எல்லா உறுப்புக்களையும் தானம் செய்து,

இறந்தும் அவருக்குள்,

நம் பந்தம் வாழ்வதைக் கண்டு

இறந்தவரின் பந்தத்தோடு வாழ்வோம்.

தானத்திற்கும், பந்தத்திற்கும் உறவு பாலமாக எங்கள் காவேரி செயல்படுகிறது,

மேலும் விபரங்களுக்கு அணுகுவீர் காவேரி மருத்துவமனையை.

 

Kauvery Hospital