சிந்தனையே சிறப்பு

சிந்தை சொல்லும் இது தேவை என்று அதை தேடி அழையும் போது அந்த சிந்தனையே சிதைந்து விடும்

சிதைந்த சிந்தையே என்று திரும்புவாய் மருந்துகளால் முடியவில்லை மருத்துவமும் உனக்கு முன்னால் தோற்று தான் நிற்கிறது

உனக்கான வாய்ப்பு நீ சிந்திக்கும் வரைதான் ஆனால் இழந்தாயே உன் வாய்ப்பை அதை சிதைத்ததால்

சிந்தையே துவண்டு போகாதே தேவையற்றதை நினைத்து

உனக்கு இருப்பதை சிந்தித்து பயன்படுத்து நீயும் வாழலாம் பிறரையும் வாழ வைக்கலாம்

உனக்கான ஆரோக்கியம் உன்னிடம் மட்டும் தான்

நீ மறக்க வேண்டியதை மறந்துவிடு

நிறுத்த வேண்டியதை நிறுத்திவிடு

நீ மகிழ்ந்திருக்க நேர்மறையானவைகளையே சிந்தித்து கொண்டிரு

நீ துவண்டு போகாமல் இருக்க உனக்கான அவசிய தேவையை மட்டும் சிந்தித்து கொண்டிரு

உனக்கு கிடைத்தது மற்றவருக்கும் கிடைக்கட்டும் என்று நினை

நீயே உன் முதலாளி நீயே உன் அதிகாரி

உனக்கான பழக்க வழக்கத்தை உருவாக்கி கொள்

உனக்கான வழிகளை முடிவு பண்ணி கொள்

உன் முடிவுகள் உனக்கானதை பாதிக்காமல் பார்த்து கொள்

நீயே சிறந்தவன் நீயே பெருமைக்குரியவன்

நீயே செல்வந்தன் நீயே சிறப்பான வன்

சிந்தை மனத்தை மாற்றும் மனத்தால் சிந்தையை மாற்ற முடியாது

உனக்கானதை பெற்றுக்கொள்ள சிந்தையே நீ சரியாக இருக்க வேண்டும்

ஆசைகள் உன்னை ஆள நினைக்கும் போது அவசியமானவை உன்னை விட்டு செல்லும்

அவசியம் தலைதூக்கும் போது ஆசை உன் முன்னே மண்டியிடுகிறது

சிந்தையே நீ எப்பொழுதும் உயர்ந்திருக்கிறாய் உன்னை ஆரோக்கியமாக வைக்கும் போது

உனக்கானதை நான் வடிவமைக்கா விடில் என் விடியலும் கேள்விக்குறிதான்

நான் சரியாக வியாபாரப்படுவது உன்னை பராமரிப்பதில் தான்

உன்னை பராமரிப்பது அவசியம் என இன்றைய புள்ளி விவரங்கள் என்னை புரியவைக்கிறது

விடியலும் நீயே விடுகதையும் நீயே

 

Vasanth David Benaya
System Administrator-EDP, Kauvery Hospital, Trichy