மருத்துவரின் மகத்துவம் – 2

பிணி என ஒருதரம் இவரிடம் அணுகிட

வருபவர் பிணி அது பறந்திடுமே!

அதிசய அனுபவம் பிறந்திடுமே!

இனிது – அவர் தரும் வழி

கவலைகள் – கனிவு அவர் முகமலர,

கனம் அது மறைந்திடுமே!

மனதினில் எழுந்து -யார்

மறைந்திடும் நொடியினில்,

மதிவிழி மருந்தது சிறந்திடுமே.

விழிவழி ஒரு துளி வரும் எனில்,

விரைந்து அதை துடைத்திட

வருவதும் அவர் கரமே.

காயத்தை ஆற்றியவரை

காயப்படுத்திய ஒருவரின் செயலை

உள்ளத்தில் வைக்காது அவர் மனமே.

ஈடில்லா நின்குணமே,

தழைக்கவைக்கும்

மனிதகுலத்தை என்றென்றுமே!

 

GK. Balasubramani

Senior Physiotherapist.

Kauvery Hospital