25-வருடங்களாக காவேரி

ஒரு நொடிப் பொழுது எடுத்த முடிவு

60 நொடிகள் ஒரு நிமிடமாகி

60 நிமிடங்கள் ஒரு மணித்துளி ஆகி

24 மணி நேரம் ஒரு நாள் கணக்காகி

365 நாட்கள் சேர்ந்து ஒரு வருடமாகி

இப்படியாக சிறுக சிறுக சேர்த்த

வருடத் துளிகள் கோர்த்து

25 வருடங்கள்… மிக நீண்ட பயணம்

இது காவேரியின் பயணம்…

இது மூவரணி…

இது முப்பெருங்குழுமம்…

மூன்று தூண்கள்..

மூன்று மருத்துவர்கள் – இவர்கள்

காவிரியின் துளிகளை நீராக்கி

நீரை ஓடையாக்கி

ஓடையை ஆறாக்கி

ஆற்றை நதியாக்கி

நதியை நேர்ப்படுத்தி அதன்

பாதையை நேராக்கி

பயணத்தை சீராக்கி

ஓடு பாதையை சரி செய்து

ஆற்றங்கரைகளை வலுப்படுத்தி

இப்படியாக இன்னும் பல….

குடகு மலையில் தலைக்காவிரியாய்ப் பிறந்து

ஒக்கனேக்கலில் ஆர்ப்பரிக்கும் அருவியாய் விழுந்து

திருச்சியில் நதியாய் ஓடி

கொள்ளிடத்தில் கடலோடு

கலக்கும் காவிரி அல்ல இது…

இந்தக் காவிரியின் பாதையோ

வேறானது… எதிர்மாறானது…

எதிர் திசையிலானது…

திருச்சியில் பிறந்து

சென்னையில் வளர்ந்து

ஓசூரில் கொடிகட்டிப் பறந்து

பெங்களூருவில் காற்தடம் பதித்த காவேரி !

அந்தக் காவிரியோ மாநில எல்லை தாண்டி வர மறுத்தது

இந்தக் காவிரியோ மாநிலம் தாண்டியும் மகத்துவம் புரிகிறது…

இது சாதனையின் உச்சம்!!

அகன்று விரிந்த இக்காவேரியில்

புதிதாய் இணைந்த சிறு ஓடை நான்

என்னைப் போல் பல ஓடைகள்

சங்கமித்து ஒன்றிணைந்த காவேரி…

எங்களுக்கு வழி காட்டுவதும்

வழி நடத்துவதும் உங்கள் பொறுப்பு…

தொட்டுவிட்ட உயரங்கள் தாண்டி

தொடமுடியா உயரங்களையும்

எளிதாய் தொட்டு தனிப்பெரும்

சக்தியாய் வளர்ந்து சிகரங்களை அடைந்திட

காவேரி குழுமத்திற்கு எங்கள்

ரேடியல் கிளை மருத்துவர்களின்

மனமார்ந்த வாழ்த்துக்கள் !

 

Dr. Meenakshi Paramasivan
Consultant Radiologist

Kauvery Hospital