ஆரோக்கிய வாழ்வு

செம்மையாகுமே வாழ்வு,
உடலும் மனமும் சீரானால்.

அறிவோமே நோய்க்காரணம்,
வியாதியும் தெளிவில்லா
மனமும் சூழலும் என்று

உணவே மருந்து என்றனர்
முன்னோர்.

குணத்தை உண்டு பண்ணுமாம் உணவு,
எனவே உண்ணுங்கள் உணவை
அவரவர் தேவையறிந்து.

உண்போம் இயற்க்கை உணவு.
தவிர்போம் இரசாயன உணவு.

தவிர்க்கலாமே உடல் உபாதைகளை,
சரியான நேரத்தில் ருசித்து புசித்தால்.

முன் தூங்கி, முன்னெழுந்தால்
இறுதிவரை ஆரோக்கியமே

உடல் சக்தி பெற உடற்பயிற்சி,
மனம் தெளிவு பெற தியான பயிற்சி.

இயற்கையை புரிந்து வாழ்ந்தால்
இயற்கையே நமை வழிநடத்தும்.

உன்னிடம் வெளிப்படுத்துமே உடல்,
தன் தேவைகளை.

பூர்திசெய் உடல் தேவைகளை,
உன் உடல் மொழி அறிந்து.

உண்ணதீர் உணவுகளை,
உன் மன இச்சைக்கு.
உண்ணுங்கள் உணவுகளை,
உன் உடல் தேவைக்கு.

இதை அறிந்தால் உடல்,
மனம், ஆன்மா என்றும்
சௌக்கியமே

GK. Balasubramani
Senior Physiotherapist, Kauvery Hospital, Salem

Kauvery Hospital