இயற்கை சொல்லும் செய்தி

ஒரு இலை உதிர்ந்து கொண்டே சொல்கிறது,

இந்த வாழ்வு நிலை இல்லாதது என்று.

ஒரு பூ மலர்ந்து கொண்டே சொல்கிறது,

வாழ்வில் ஒரு நாளாவது கௌரவமாக வாழ வேண்டும் என்று.

ஒரு மேகம் பொழிந்து கொண்டே சொல்கிறது,

கசப்பினை உள்வாங்கிக் கொண்டு நல்லவற்றை பகிர வேண்டும் என்று.

ஒரு மின்னல் உருமிக் கொண்டே சொல்கிறது,

இருப்பது ஒரு நொடியாயினும் ஒளிர வேண்டும் என்று.

ஒரு மெழுகுவர்த்தி கரைந்து கொண்டே சொல்கிறது,

கடைசி வரை மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று.

ஒரு மரம் குளிர்ந்து சொல்கிறது,

தன்னைப் போன்றே கஷ்டத்தில் இருந்தாலும் மற்றவர்களுக்கு பயனுள்ளவாறு இருக்க வேண்டும் என்று.

ஒரு நதி சலசலவென்று பாய்ந்து கொண்டே சொல்கிறது,

தன்னைப் போன்றே கஷ்டத்திற்கும் சுகத்திற்கும் அசராமல் ஓட வேண்டும் என்று.

நிலா ஒளிர்ந்து கொண்டே சொல்கிறது,

தன்னைப் போன்றே மற்றவர் வாழ்க்கையில் ஒளியை வீச வேண்டும் என்று.

வண்ணத்துப்பூச்சி சிறகடித்துக் கொண்டே சொல்கிறது,

தன்னைப் போன்றே நோயாளிகள் நலம் பெற்று சிறகடிக்க காவேரி மருத்துவமனையை அணுகுங்கள் என்று.

 

GK. Balasubramani

GK. Balasubramani
Senior Physiotherapist