தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்

மனிதா வெற்றி என்பது,

ஒருநாள் கூற்று இல்லை.

பல நாள் பயிற்சியும், விடா முயற்சியும் சேர்த்து பல பிரச்சனைகள் பல அவமானங்களுக்கு மத்தியிலும்,

உன் இழப்புக்கும், பொறுப்புக்கும் நடுவினில் உனக்கென ஓர் ஓட்டம் அது தான் வெற்றி.

இந்த ஒரு வெற்றி உனக்கும் வேண்டுமெனில்,

எழுந்து வா முயற்சி செய் போராடு.

உன் உடம்பிலிருந்து வழியும், ஒவ்வொரு துளி வேர்வையும் இந்த மண்ணை தீண்டும் போது, உன் தலைகள் ஏந்தும் மனிதா இப்பாருலகில் உன்னை வெல்ல யாரும் இல்லை.

உன்னை போலவும் யாரும் இல்லை,

உன் முயற்சிக்கு இந்த வானமே எல்லை.

எழுந்து வா,

உன்னால் முடியாது என்று எதுவுமே இல்லை,

நீ நினைத்தால் எதையும் சாதிக்கலாம்.

முயற்சி செய்து போராடினால் முடியாது என்று எதுவும் கிடையாது…!

 

 

GK. Balasubramani
Senior Physiotherapist

Kauvery Hospital