இதயநகரத்தின் செவிலியர்கள் தின வாழ்த்து

Geetha

R. Geetha1

1Senior Staff Nurse, Kauvery Heartcity, Trichy, India

Email: [email protected]

Dear Colleagues,

மருத்துவம்..!

ஆம்..!!

மருத்துவத்தில் சிறந்தது

எம் செவிலியர்களின் தனித்துவம்….

 

உணர்வுகளில் மென்மையாய்….

உள்ளங்களில் இனிமையாய்….

 

வெண்ணிற ஆடை அணிந்த கோவையாய்…

வெண்மையான மனம் கொண்ட பாவையாய்…

 

அன்னைக்கு நிகரான

அன்பு காட்டி..!!

அரவணைப்போடு

சேவையாற்றி..!

 

அனைவரின் உள்ளங்களிலும்

இடம்பிடித்த சேவகிகள்

இந்த செவிலியர்கள்..!!

 

கிரீடம் சூடாத தேவதைகலாய்

சித்தரிக்கப்பட்டாய்

சித்திரம் போல் மிளிர்கிறாய்

 

உம் சேவையால்…

உம் அளவில்லா கவனிப்பால்…

அணிகலன்கள் ஏதுமின்றி

அழகாய் தோற்றமளித்தாய்..!!!

 

பிறந்த,

புகுந்த குடும்பங்களை

எல்லாம் மறந்து

நோயாளிகளுக்கு சேவையாற்றி…!!

 

தனது நேரங்களை

சேவையால் செலவிட்ட

செவிலியர்களே…..

 

உருவம் கொண்டு

உயிரொன்று

உலகை காணும் நேரத்தில்…

 

என்னை தூக்கி

எம் தாய்க்கே….

அறிமுகப்படுத்திய

நீயே….

எமது முதல் தாய்…..

 

கணமொரு கவிதை கூட எழுதலாம்….

கண் இமைக்காமல்

நீயாற்றும் சேவைக்கு….

 

தன் கவலைகள் எல்லாம் மறந்து

தனது உன்னத சேவையால் உயர்த்து

எல்லாவற்றையும்

புன்னகையால் கடப்போம்….

 

செவிலிய சேவையால்

சிறப்பாய்

தனது சேவையாற்றும் செவிலியர்களுக்கு

செவிலியர் தின வாழ்த்துகள்………!.

 

Kauvery Hospital