“பெண்ணே பெருமை கொள்”

பெண்ணே நீ பெண்ணிடம் பிறந்தாய்

அன்னையானாய் அக்காவானாய் தமக்கையானாய் தாரமானாய்

உறவு முறையே உன்னால் தானே பெருமை கொள்

உறவை உருவாக்கி தந்தவளே நீதானே பெருமை கொள்

மருத்துவராய் தன்மையால் நோயாளியின் நம்பிக்கையானாய்

செவிலியராய் சேவைக்கே அர்த்தமானாய் பெருமை கொள்

கதிரியக்க நிபுணராய் நோயாளிக்காக கதிரியக்கம் சுமந்தாய்

உணவியல் நிபுணராய் உணவே மருந்தென வழிகாட்டியவளே

மருத்துவ பொறியாளராய் மருத்துவ மருந்தாளராய் மருத்துவமனையின் வரவேற்பாளராய் தூய்மை பணியாளராய்

குழந்தை பராமரிப்பாளராய் நோயாளியின் ஆலோசகராய் நோயாளியின் சேவை  அதிகாரியாய்

மருத்துவமனையின் ஒட்டு மொத்த சேவையையும் தன்னுடைய தாக்கியதால் பெருமை கொள்

சந்தை படுத்துவதில் சங்கடம் கடந்து சிந்தித்தாய் பெருமை கொள்

பெண்ணே பொறாமை கொள்ளாமல் இருந்திருந்தால் தரமாய் இருந்திருப்பாயோ

ஆணவம் இல்லாதிருந்தால் அதிகாரம் உன்னிடம் மண்டியிட்டிருக்குமோ

பெண்கள் மீதான முதலீட்டில் முன்னுதாரணம் மருத்துவ துறையே அதினால் பெருமை கொள்

நீயே உனக்கான முதலீடு சரியான முதலீட்டாளராய் சரியான தருணத்தில் முதலீடு செய்

Mr. M. Vasanth David Benaya
System Administrator-EDP, Kauvery Hospital, Trichy