Poem

தமிழ் நாட்டில்,
பயிர் பிழைப்பதும்,
உயிர்
பிழைப்பதும்
காவேரியால்
தான்!

எங்களை வாழ வைக்கும்,
காவேரியே!
தமிழர்களுக்கு
மட்டும் தான் உயிர் கொடுக்கிறாய்
என்றிருந்தேன்,
தற்பொழுது தான்
தெரிந்து கொண்டேன்,
தமிழுக்கும்
உயிர் கொடுக்கிராய் என்று!
காவேரியே!
நீர் தரும்
ஆங்கில
மருந்தால் தான்
இளைத்து வரும்
தமிழும்,
புருஷ்டி
ஆகிறது,
புது சிருஷ்டி
ஆகிறது!!

தங்களின்
தமிழ் உணர்வு
தளைக்கட்டும்,
தமிழர் உயிர்
பிழைக்கட்டும்!

என்றும்
வாலிப
காவேரியே!
நீர் என்றென்றும்
வாழிய காவேரியே!!

கவனிப்பு:

இவன் பிழைப்பானா,
என கேள்விக்குறி யோடு,
வருபவர்களை,
என்னது
இவன் பிழைத்து
விட்டானா எனஆச்சரியக்குறியாக,
மாற்றுவதே,
நம் கவனிப்பின்
மகத்துவம்!

காவேரியின்
கவனிப்பில்,
தாய்மையும்
வாய்மையும்
ஒட்டிப் பிறந்த ரெட்டை மழலைகள்!!

உணவுக்கு
பலம் உப்பு!
நம் மருத்துவ மனையின்
உயர்வுக்கு
பலம்
கவனிப்பு!!

மன்னிப்பு
கடவுளின்
குணம்!
கவனிப்பில்
உன்னிப்பு
நம் காவேரியின்
குணம்!!

நோயாளியை,
வெறுந் தாழியைப்
போல் கவனிக்காமல்,
விருந்தாளியைப்
போல் கவனிப்பது
நம் கவனிப்பின்
உச்சம்!

கருத்தான
காதல் தொடர்கிறது,
காமத்தையும்
தாண்டி!
உருத்தான
நம் கவனிப்பு
தொடர்கிறது
நடு சாமத்தையும்
தாண்டி!!

நமக்கும்
நோயாளிக்குமான
உறவு,
தாய்க்கும்
சேய்க்கும் ஆன
உறவு!
ஆம்,
சேய் அழுதால்
தாய் பால் கொடுத்தது
கண்ணீர்
துடைப்பாள்!
நாம்
நம் தோள் கொடுத்து
கண்ணீர் துடைக்கிறோம்!!

முடமான வரையும்,
நடமாட வைப்பது
நம் திடமான
கவனிப்பு!
படுக்கையே
இடமானவரையும்,
பந்தாட செய்வது
நம் முடமாகாத
கவனிப்பு!!

உணவில் கவனம்:
நாம் கொடுக்கும்
உணவில் உள்ள
சர்க்கரையின்
கவனம்
நோயாளிக்கு
சந்தோஷ
சர்க்கரமாய்
உள்ளது!
உப்பில் உள்ள கவனம்,
நோயாளியை
உற்காகத்தின்
உப்பரிகையில்
நிறுத்துகிறது!
எண்ணெயில்
உள்ள கவனம்
நோயாளிக்கு
நல்ல எண்ணத்தை
கொடுக்கிறது!! மொத்தத்தில்
நாம் கொடுக்கும்
உணவு
நோயாளி பலிக்காத
உணவு,
நோயாளிக்கு
பலிக்கும்
கனவு!!

சுகாதாரத்தில்
கவனம்:
புதிதாக
மணம் முடித்த,
மாலை நேர
தாரம் போல்
மங்காமல்
மயக்குகிறது,
நம்ம காவேரியின்
சுகாதாரம்!
கழிப்பறை
அது,
முகம் கோண
வைக்காமல்
முகம்
காண வைக்கிறது!
நம் காவேரி மருத்துவமனையில்
வரவேற்பு
பகுதி முதல்,
வழியனுப்பும்
பகுதி வரை
எங்கும்
வழுக்காதா
கவனிப்பு!
என்றும்
அலுக்காத
கவனிப்பு!!

உழைப்பில்
கவனம்:
மூச்சிறைக்க
வருபவரையும்,
முதலுதவி யிலேயே
பேச்சுரைக்க
வைப்பது,
நம் பாசறை
உழைப்பு!
நம் ஊழியர்கள்
ஒவ்வொருவரும்,
களைப்பை
கருதா,
உடல் இளைப்பை
கருதா,
பணிச் சுமை
என்னும்
மளைப்பை
கருதாமல்
உழைக்கும்
உழைப்பு,
ஒருநாளும்
ஆகாது விருதா!
நம் மருத்துவ
மனையின்
வளர்ச்சிதான்
அதற்கு விருதா!!

உண்மையில்
கவனம்:
நோயை பற்றி
நோயாளியிடம்
விளக்கும்
போதனையில்
உண்மை,
பரி சோதனையில்
உண்மை!
சிகிச்சையில் உண்மை,
அறுவை சிகிச்சையில்
உண்மை!
வரியில்
உண்மை,
வரிசையில்
உண்மை!
வருமானத்தில்
உண்மை,
ஊழியர்களுக்கு
தரும்
வெகுமானத்தில்
உண்மை!
மொத்தத்தில்
உண்மை என்றும்
நம் அண்மை!!