இயன்முறை மருத்துவமும் மறுவாழ்வும்

பயிற்சியில் முயற்சி கொண்டு,

நோயறியும் தேர்ச்சி கண்டு,

மறுவாழ்வு கொடுக்கும் தொண்டு,

நம் இயன்முறை மருத்துவத்தில் உண்டு.

இயலாதவர்களை குணப்படுத்தலும், முயலாதவர்களை வலுப்படுத்தலும்

இயன்முறை மருத்துவர்களின் அதிசயம்.

மனித இயலாற்றலைப் பெருக்குவதில்

மருத்துவர்களின் முயற்சி பெரும் சாதனை.

அறுவை சிகிச்சைக்கு பின், நோயாளிக்கு மறுவாழ்வு

அளிப்பது இயன்முறை மருத்துவம்.

பிறந்த குழந்தை முதல்

தடி பிடிக்கும் தாத்தா வரை இயன்முறை மருத்துவத்தால் பெரும் பயன்களோ ஏராளம்,

இம்மருத்துவத்தில் நன்மைகளோ தாராளம்.

இம்மருத்துவத்தில் பல சிறப்பு பிரிவுகள் உண்டு. ஒவ்வொன்றும் உடலில் நோய் தன்மையை ஆய்ந்து,

நோயின் விடுதலைக்கு பாடுபடும் அற்புதம் இயன்முறை மருத்துவம்.

GK. Balasubramani,

Senior Physiotherapist.

Kauvery Hospital