விளையாட்டுத் திடல்

என் கைவிரலால் உன்னை வருடி முத்தமிட்டு

ஓடதொடங்கினேன்.வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்க

ஓட்டத்திலும் வெற்றி பெற்றேன் இரத்த ஓட்டத்திலும் காயம் பட்டேன்

காயத்தோடும் கவலையோடும் சற்று யோசித்தேன்

உன்னை மறந்து விடுவேன் என்ற பயத்தில் தானோ என் பாதத்தில்

காயத்தை தந்து சென்றாய் உன்னையும் மறக்க மாட்டேன்

உன்னால் கிடைத்த வெற்றியையும் மறக்க மாட்டேன்.

 

Mechael Merlin
ANM, Tennur