உயிர் காக்கும் தானம்

நீங்கள் இறந்த பிறகும் உயிர் வாழுமே,

உடல் உறுப்புகள் நீங்கள் தானம் செய்தால்.

பலன் இல்லாமல் போகும் உங்கள் உடல் உறுப்புகள்,

நீங்கள் இறந்த பிறகு.

உங்களால் பலருக்கு வாழ்க்கை கிடைக்கும்,

நீங்கள் தானம் செய்தால்.

மண்ணோடு மண்ணாகி தீயால் புகையாகி வீண் போகும்,

உங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வீர் பலர் வாழ.

உங்கள் உறவுகள் சந்தோஷப்படுமே,

நீங்கள் இறந்த பிறகும் இன்னொருவரில் நீங்கள் வாழ்கிறீர்கள் என்று.

பெரு உள்ளம் கொண்டோரே பதிவு செய்வீர் உங்கள் உடல் உறுப்பு தானத்தை,

அதன் விவரம் அறிய அணுகுவீர் எங்கள் காவிரியை.

மனிதநேயம் காப்போம் தானம் செய்து,

உதவிடுவோம் தானம் தேவை உள்ளோர்க்கு.

GK. Balasubramani,

Senior Physiotherapist.

Kauvery Hospital