செவிலிய தேவதைகள்

வெண்மையான வெள்ளாடை உடுத்தி , வெண்மேகமாய் கண்முன் வந்து,

மாசற்ற மலர் புன்னகையுடன் ,

மனம் கோணாத அரவணைப்புடன் ,

உடலுக்கு உணவிட்டு மனதிற்கு மருந்திட்டு ,

நோயாளிகளுக்கு உயிர் என்னும் பரிசளித்து செல்லும் தேவதைகளே செவிலியர்கள்.

உறவுகள் தொலைத்து உறக்கம் களைத்து,

உயிரை பணயம் வைத்து உயிர்நாடி காத்து ,

தன் வலி மறைத்து , பிறர் வலி போக்கும் கை விளக்கு காரிகைகளே செவிலியர்கள் !!

அருவருப்பு தவிர்த்து அரவணைப்பு கொடுத்து,

இரத்தம் படிந்த என் உடலை ,

சுத்தம் பேணி துடைத்தவளே !

விபத்தொன்றில் சிக்குண்டு … என் விலா எலும்பு நோகக்கண்டு ,

என் தாய் மனம் போல உன் உதவும் முகம் கண்டு என்னுயிர் பிழைத்தேனே !!

ஒரு செவிலியாக நான் கூறுவது….

பொறுமை என் மணிமுடி ,

கடிகாரம் என் காலடி,

அன்பு என் அடையாளம் ,

அரவணைப்பு என் பிரதானம் ,

இரக்கம் என் நண்பன்,

உறக்கம் என் எதிரி

விடுமுறை அரிது,

கடமையோ பெரிது. மொத்தத்தில் சுயநலம் களைத்து

பிறர் நலம் காத்து வாழும் உன்னத செவிலியர்கள் அனைவருக்கும்

உருக்கமான நன்றிகள்.

A. Mechael Merlin
ANM, Tennur