ஒருபோதும் கேட்காதீர்கள்: “உனக்கு என்ன வேண்டும் என்று”

பரந்து விரிந்த உலகத்தில்

சொந்தமாய் ஒரு குட்டித் தீவு,

பார்வையிலும்,

சிந்தையிலும்

வஞ்சகமில்லா உறவுகள்,

நினைத்தால் மழை

நனைந்தால்

வெயில் தரும் வானிலை,

கால் பதிக்கும் இடமெல்லாம்

பூ

பூக்கும் புற்தரை,

ஓடி உழைக்கும் நாட்களை

விட

ஓய்வெடுக்க கொஞ்சம்

அதிக நாட்கள்,

சுற்றிக் கொண்டே

இருந்தாலும்

மீண்டும் கிடைக்கும் மணித்துளிகள்,

நமக்கும் மேலாக நமது

பெற்றோர்களுக்கு

ஆயுட்காலம்,

இறப்பதற்குள் நனவாகும்

நான்

காணும் கனவுக்காலம்,

பிடித்த ஓர் உயிருடன் இறுதி

வரை பிரியா உறவு,

படித்து வரும் அத்தனையும்

மறக்காமலிருக்கும்

நல்லறிவு,

திரும்பும் திசையெல்லாம்

பறந்து திரிய றெக்கைகள்,

விரும்பும் இடமெல்லாம்

சுற்றிப்

பார்க்கும் சுதந்திரம்,

இதற்கு மேலும் இருந்தால்

பூமிக்கு பாரம் என்று,

நான் நினைக்கும் கணப்பொழுதில்

இனிப்பான மரணம் ஒன்று,

இன்னும் என் மனதிற்குள்

ஈராயிரம் யோசனைகள்,

இதுவெல்லாம் கிடைக்காதா என்று

இறைவனிடம் யாசனைகள்.

அதனால் தான் சொல்கிறேன்,

ஒருபோதும் கேட்காதீர்கள்.

உனக்கு என்ன வேண்டும் என்று!!

 

 

 

Kauvery Hospital