என்னுள் 5S

விழிப்புணர்வாய் என்னுள் வந்து போகிறாய்,

ஐந்துஎஸ் கவிதைகள் தந்து போகிறாய்,

உறுதிமொழி வாசித்து அதன்படி செயல்படுகிறாயா என்று உன்னுள் கேட்டுப் பாருடா!

ஐந்துஎஸ் என்றால் என்ன?

ஒவ்வொரு பொருளுக்கும் ஓரிடம்,

அனைத்து பொருட்களும் அதன் இடத்தில் என்ற கொள்கையை கடைபிடித்ததன் மூலம்,

என்னுள் மனத்தூய்மை மாற்றத்தை உணர்ந்தேன்!

அதன் அளவீடுகளை காவேரியில் கண்டறிந்து திகைத்தேன்!

ஐந்துஎஸ் வழிமுறையாலே,

தேவையற்ற விரயங்கள் தவிர்த்து,

மதிப்பு சேர்ந்தது அதுவும் உன்னாலே,

இன்று தரம் மற்றும் திருப்திகரமான சேவைகளை வழங்குகிறேன் அதுவும் உன்னாலே,

மருத்துவக் கழிவுகளை கலக்காதே,

வகையறியாமல் அப்புறப்படுத்தாதே,

குப்பைகளை சேர்க்காதே,

என்ற செல்ல அதட்டலிலும் அடிப்படை அறிவை உணர்ந்தேன் உன்னாலே.

ஐந்துஎஸ் வழிமுறையை பழகு,

அதுவே மருத்துவமனையின் அழகு,

எண்ணற்ற நன்மைகள் உன்னாலே,

அதைக் கடைபிடித்தால்

எந்நாளும் நந்நாளே!

 

 

GK. Balasubramani
Senior Physiotherapist

Kauvery Hospital