காவேரியின் நவீன ஐந்து எஸ்(5S) மாடல்

அறிவாயா! நமது காவேரியின் தரம்,

ஐந்து எஸ்(5S) என்று.

 

தெரிந்து கொள், ஐந்து எஸ்(5S)

என்றால் என்னவென்று.

 

ஐந்து எஸ்(5S) என்பது,

ஒரு கூட்டு முயற்சி.

தெளிவோம் கூட்டு முயற்சியின் நிலைகளை.

 

முதல் எஸ்(1S) என்பது, தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்துதல்.

 

இரண்டாவது எஸ்(2S) என்பது,

பொருட்களை விரைவாக எடுக்கும்படி பொருளுக்கு ஏற்ற இடம் அமைத்தல்.

 

மூன்றாவது எஸ்(3S) என்பது,

இடத்தை தூய்மையாகவும், கருவிகளை பராமரிப்பு செய்தும் வைத்தல்.

 

நான்காவது எஸ்(4S) என்பது,

கால விரயம் இன்றி

வேலை செய்ய, கோப்புகளையும், பொருட்களையும் எளிதாக எடுக்கும்படி வைத்தல்.

 

ஐந்தாவது எஸ்(5S) என்பது,

கணக்குகளை தணிக்கை செய்து,

மேற்கூறிய பணிகளை மேல்பார்வை செய்து, நன்னடத்தையை மேம்படுத்துதல்.

 

ஐந்து எஸ்(5S)இன் நுண்ணிய சிறப்பம்சம் லீன்(Lean),

லீன் என்பது மேலாண்மை நடைமுறையின் தொகுப்பு.

 

கழிவுகளை குறைத்து,

மதிப்பு கூட்டு அல்லாத செயல்பாடுகளை அகற்றுவதே, லீனின் அடிப்படைக் கொள்கை.

ஐந்து எஸ்(5S) மற்றும் லின்(Lean) மூலம் மருத்துவ பணியாளர்கள் மற்றும் நோயாளிகள், ஆரோக்கியமாகவும் மன நிறைவாகவும் இருப்பதால் நல்ல மகிழ்ச்சியான சூழல் கிடைக்கிறது.

 

நம் காவேரியின் ஐந்து எஸ்(5S)

கொள்கையின் பயணம்

 

எமது காவேரி ஸ்தாபனம் 2018இல் துவங்கியது,

அப்போது ஏழு மண்டலங்கள் உருவாகியது.

 

2019 இல் மண்டலங்களும் 35 தலைவர்களும் மற்றும் துணைத் தலைவர்களாக அதிகரிக்கப்பட்டு பிளாட்டினம் விருது பெற்றது.

 

2020-21 கோவிட் காலகட்டத்தில்

ஐந்து எஸ்(5S) கலாச்சாரத்தை பின்பற்றியது

 

பிறகு பல சவால்களை எதிர்கொண்டு, அதே வேகத்தில்

2022 இல் பன்னிரண்டு மண்டலங்களாக அதிகரிக்கப்பட்டு சஸ்டெனன்ஸ் நிலை ஒன்று விருது பெற்றது.

 

அதனைத் தொடர்ந்து குறைகளை நீக்குவதற்கு,

தணிக்கை குழு உருவானது.

 

பின்னர் 2023 இல் சஸ்டெனன்ஸ்

இரண்டாம் நிலை கிடைத்த விருதை தொடர்ந்து

 

ஒவ்வொரு மண்டலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்கள் மற்றும்,

நூற்றுக்கு மேற்பட்ட துணைத்தலைவர்கள் அதிகரிக்கப்பட்டது.

 

இதன் பயனாக 2024 ஆம் ஆண்டு மாதிரி மருத்துவமனை என்ற மைல்கல்லை அடைந்தது.

 

மருத்துவர்கள், உயர் அதிகாரிகள், செவிலியர்கள் மற்றும், பணியாளர்கள் மூலம்,

சேலம் காவேரி மருத்துவமனை

மாடல் ஐந்து எஸ்(5S) கனவு நினைவானது.

 

GK. Balasubramani

GK. Balasubramani

Senior Physiotherapist