நூறைக் கடந்த காவேரியின் மருத்துவ இதழ்(ஜர்னல்)

நான்கு ஆண்டுகளாக அறிவின் ஒளி வீசிய,

காவேரி மருத்துவ ஏட்டின் பெருமையை நீ வாசி!

புதிய தகவல்கள், ஆய்வுகள் நம்பிக்கை காட்டும்,

மருத்துவர் உழைப்பால் உருவான பொக்கிஷம்!

அறிவியல் நுட்பங்கள் வளர்ந்து,

ஆரோக்கிய வாழ்வு மலரச் செய்கின்றன.

ஏழை எளியவர் நலன் காக்க,

இதழ்கள் நைட்டிங்கேல் மற்றும் காவேரியன்.

நூறாம் இதழ் – காவேரி மருத்துவச்சுடர்,

ஞான ஒளி வீசும் நற்றமிழ் இதயம்!

காலம் கடந்து காக்கும் கலங்கரை விளக்கம்,

காவிரி போல் பாய்ந்திடும் மருத்துவ ஞானம்!

காவேரியன், நைட்டிங்கேல் இணைந்து,

ஆயிரக்கணக்கான கட்டுரைகள்!

முன்னூற்று ஐந்து மருத்துவர்கள்,

நூற்று முப்பது செவிலியர்கள் பங்களிப்பு!

நானூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுரை,

தொண்ணூறு ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் கவிதைகள்,

முன்னூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் களஞ்சியம்!

தேசிய அங்கீகாரம் பெற்ற ISSN முத்திரை!

2021 இல் தொடங்கி,

நான்கு ஆண்டுகள் நிறைவு கண்டது!

மருத்துவஇதழ் சுடராய் ஜொலிக்கும்,

நைட்டிங்கேல், காவேரியன்!

நான்கு ஆண்டுகள் கடந்தும் அறிவை வளர்த்தாய்,

ஆராய்ச்சி முத்துக்கள் அள்ளித் தெளித்தாய்!

நோய்களை வெல்லும் நுட்பங்கள் சொன்னாய்,

நெறிமுறைகள் தரும், மருத்துவம் வளரச் செய்கின்றாய்!

புதிய கண்டுபிடிப்புகள் தோன்றி,

நோய்கள் அகலட்டும்!

காவேரி மருத்துவஇதழ்

புகழ் ஓங்கட்டும்,

சேவை தொடரட்டும்!

GK. Balasubramani

Senior Physiotherapist, Salem

Kauvery Hospital