ஆரோக்கிய வாழ்வு – 2

உணவோடு நீரைப் பருகாதே!

கண்ணில் துாசி கசக்காதே!

கழிக்கும் இரண்டை அடக்காதே!

கண்ட இடத்தில் உமிழாதே!

காதைக் குத்தி குடையாதே!

கொதிக்க கொதிக்க குடிக்காதே!

நகத்தை நீட்டி வளர்க்காதே!

நாக்கை நீட்டி குதிக்காதே!

பல்லில் குச்சி குத்தாதே!

பசிக்காவிட்டால் புசிக்காதே!

வயிறு புடைக்க உண்ணாதே!

வாயைத் திறந்து மெல்லாதே!

வில்லின் வடிவில் அமராதே!

வெற்றுத் தரையில் உறங்காதே!

GK. Balasubramani

Senior Physiotherapist

Kauvery Hospital