வியக்கத்தகும் அதிசயமே! கண்டு வியக்கிறேன்

பெண்ணே உன் சிந்தையின் கட்டமைப்பு எப்படி பட்டதோ?

உத்வேகத்தை செயல்படுத்தும் வேகம் எப்படி பட்டதோ?

பெண்ணாய் நீ சந்திக்கும் பிரச்சனைகளுக்கு நீயே கண்டறியும் தீர்வு எப்படி பட்டதோ?

மனதின் சந்திப்பு நினைவின் எதிர்ப்பு புரியும் முன்னே முடிவுக்கு கொண்டுவரும் திறமை எப்படி பட்டதோ?

பெண்ணே நீ படும் பாடுகளை உனக்குள்ளே மறைத்து போடுகிற செயல்பாடு எப்படி பட்டதோ?

எத்தனை உன் பின்னே வந்தாலும் அத்தனையும் உதறித் தள்ளிவிட்டு இறுக பிடிப்பது எப்படி பட்டதோ?

கல்வி கூட நீ கற்ற பின் தான் அது சமுதாயத்தின் வளர்ச்சிக்கானது என தெரிந்ததே

பதவி கூட உனக்கு கிடைத்த பின் தான் அங்கீகாரம் அதில் இருக்கிறது என தெரிந்ததே

பற்று நீ காண்பித்த பிறகுதான் அது வாழ்க்கைக்கான அஸ்திபாரம் என தெரிந்ததே

நீ வழி தேட பிறந்தவள் அல்ல வழிகாட்ட பிறந்தவள்

நகைப்புக்கு உரியவள் அல்ல சிறப்புக்குரியவள்

நீ உதறி தள்ளப்பட்டவள் அல்ல உதாரணமானவள்

நீ சங்கடங்கள் தாண்டிய சமுதாயத்தின் அடையாளம்

உன் வழித்தடங்கள் எதிர்கால தலைமுறைக்கு கான தேடல் தளம்

செயல்பாட்டை துரிதப்படுத்து செயல்திறனை மேம்படுத்து எல்லா தளமும் உமக்கானதாகட்டும்

குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம் பெண்ணே உன் சிரிப்பில் உலகத்தையே காணலாம்.

 

Vasanth David Benaya

System administrator – EDP

Kauvery Hospital, Trichy

Kauvery Hospital