செவிலியர்கள் தின வாழ்த்து கவிதை

M. Vasanth David Benaya

System Administrator-EDP, Kauvery Hospital, Trichy

*Correspondence: +91 98946 37316; [email protected]

vasanth-david

அன்பு நிறைந்தவளே!

கனத்த இதயத்தோடு மருத்துவமனை வந்தாலும் கருணை குறையாதவளே!

உடல் சோர்வு உள்ள போதும் மனம் நோகாமல் பேசுபவளே!

நோயாளியின் வயதை காணாமல் நோயின் தன்மைக்கான சேவகியே!

தன் தேவைக்காக வாழாமல் மருத்துவ சேவைக்காக வாழ்பவளே!

கல்வி அறிவை தரும் உன் சேவை உயிரையே தரும்!

கையாளாகாத நோயாளியையும் கை கழுவி (சுத்த கைகளோடு) காக்க நினைப்பவளே!

நீ உடுத்துகிற உடைகளின் வண்ணைங்கள் மாறாலாம் உன் எண்ணங்கள் ஒரு போதும் மாறாதே

உன் உள்ளம் போலவே உன் எண்ணமும் வெள்ளை தானே!

நோயாளியின் நம்பிக்கையே நோந்து வெந்தவர்களின் மனதின் ஆறுதலே

மருத்துவமனையின் தேவதையே ! நோயாளியின் சுடர் ஒளியே!

Kauvery Hospital