செவிலியர் எனும் தாய்

Balasubramani

GK. Balasubramani,

Senior Physiotherapist, Kauvery Hospital, Salem

Correspondence: [email protected]

மகத்தான மருத்துவத்தின்

உயிர்ப்புக்காய் ஒருகணம்

ஓயாது உருகித் துடிக்கும் இதயம்,

ஆதரவாக தொடுதல்,

அமைதியான புன்னகை,

அழைப்பிற்காய் காத்திருக்கும் செவிகள்.

மனித நேயத்தின் வெளிப்பாடே

அவர்களின் அக்கறை.

தன்னலமற்ற சேவை குணம்,

நோயாளிகளுக்கு உதவிடும் மறு தாய்.

பத்து மாதம் கருவை சுமந்ததோ தாய் ஆனால் மானுட உலகின் முதல் ஸ்பரிசம் செவிலியரே.

ஆகையால் மதிப்போம் செவிலியரை,

வாழ்த்துவோம் செவிலியர் தினத்தை.

Kauvery Hospital