முதுமையும் ஆரோக்கியமும்

முதுமை என்பது,

ஒவ்வொரு மனிதனும் சந்திக்க வேண்டிய பருவம்.

அறியாமையிலும், ஆசையாலும், சில பழக்கங்கள் உருவாகிறது.

இதனால் உணவு பழக்கமும் வாழ்க்கை முறையும் மாறுகிறது,

இதனால் குணம் பேதமடைகிறது.

குணம் பேதத்தால் உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாடு மாற்றத்தால்,

நோய் தன்மை வளர்கிறது.

நோயுற்ற மனிதன் உடல் உபாதைகளாலும்,

மன அழுத்தத்தினாலும் பாதிக்கிறான்.

இதனால் வாழ்வியல் அனுபவங்களை இழக்கிறான், இதனால் முதுமையை கடக்க கஷ்டப்படுகிறான்.

ஒரு மனிதன் சுய உணர்வோடு உடல் மொழி அறிந்து,

உடலுக்கான உண்மையான தேவைகளை பூர்த்தி செய்து,

உடற்பயிற்சியோடு தியானம் பழகினால் முதுமையிலும் ஆரோக்கியமே!

 

GK. Balasubramani
Senior Physiotherapist, Kauvery Hospital, Salem

Kauvery Hospital