மாற்றத்தை விதைக்கும் திறனாளிகள்

இறைவன் படைத்த அழகான மாலைகளில் நாங்கள் உதிர்ந்த பூக்களோ,

அவன் விதைத்த விதைகளுக்குள் நாங்கள் உடைந்த விதைகளோ.

குத்தும்விழிகொண்டு பார்க்காதீர்கள் கொஞ்சம் கூனிக்குறுகி போகின்றோம்,

கொத்தும் விழி கொண்டு பார்க்காதீர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் உடைகின்றோம்.

அண்ணன் தங்கையாக வாழ நினைக்கிறோம் அனாதையாக்காதீர்,

பார்வையில்லை அன்பிற்காக ஏங்கி தவிக்கின்றோம் அடித்து விரட்டாதீர்.

தடி கொண்டு நாங்கள் நடக்கும்போது தட்டிக் கொடுக்க வேண்டாம்,

நாங்கள் தட்டி நடக்கும் தடியை நீங்கள் தட்டி விடாமல் நகர்ந்தால் போதுமே.

தன்னம்பிக்கையும் தன்மானம் அதிகம் எங்களுக்கு,

அதனால் தான் என்னவோ எங்களை பிடிப்பதில்லை உங்களுக்கு.

கண் உண்டு ஆனால் பார்வை இல்லை வாழ்க்கை உண்டு ஆனால் வலது கையில்லை கடந்து போக பாதை உண்டு ஆனால் கடக்க கால்கள் இல்லை,

கடலளவு மனது இருக்கிறது அனால் கையில் பணமில்லை.

ஹெலன் கெல்லரும், ஸ்டீபன் ஹாக்கிங்கும் மாற்றுத்திற்கான விரைதூவிய மாற்றுத்திறனாளிகள்,

சுதா சந்திரனும், பீதோவனம் உறுப்புகளில் ஏற்பட்ட மாற்றத்தையே மாற்றிய திறனாளிகள்.

ஊனம் என்பது எங்களுக்கு உறுப்புகளில் மட்டும் தானே,

நீங்கள் நம்பிக்கையோடு எங்கள் கரம் பிடித்தால் எங்களுக்கும் வாழ்க்கையை வாழ தன்னம்பிக்கை கிட்டும் தானே.

balasub1

GK. Balasubramani,

Senior Physiotherapist.

Kauvery Hospital