“விடாமுயற்சி வெற்றி தரும்”

கனவுகளை புதுப்பித்துக் கொண்டே இரு,

இல்லையெனில் அதுவும் ஓர் நாள் மங்கி மறைந்திடும்.

தோல்வியை நினைத்து வருந்தாதே,

அது தந்த வலியை படிக்கல்லாய் மாற்றி வெற்றியைத் தேடு.

துன்பங்களை நினைத்து வருந்தி,

இயற்கை தரும் வாய்ப்பை இழக்காதே.

காண்கின்ற கனவு நனவாக,

மனதில் சங்கல்பம் வை.

சங்கல்பம் நிறைவேற தீவிர முயற்சி செய்,

முயற்சி நிறைவேற மனதிற்கு சக்தி கொடு.

ஜெயம் உன் அருகில் வரும், இதுவே காவேரியனின் ரகசியம்.

balasubramani

GK. Balasubramani

Senior Physiotherapist

Kauvery Hospital