Advanced Endoscopic Surgery

குடல் உள்நோக்கு கருவி    அல்லது  எண்டோஸ்கோப் பரிசோதனை என்பது    உணவு குழாய்    இரைப்பை மற்றும்   மேல்  சிறுகுடல்   ஆகியவற்றை  பரிசோதனை செய்து  அதில் இருக்கும்  பிரச்சனைக்கான  தீர்வை  மேற்கொள்ள  வகை செய்யும்.

தற்போதுள்ள  மேம்பட்ட கருவிகள்  மிகவும்  மெல்லியதாகவும்,  நெகிழ்வுத் தன்மை உடையதாகவும், நேர்த்தியாகவும்    பரிசோதனை செய்து கொள்ள  ஏதுவாக இருக்கும்.   தற்போதுள்ள  கருவியின் தடிமன்  நமது  சுண்டுவிரல் அளவே இருக்கும்  அதாவது  9.4 முதல்  9.8  எம் எம்  வரை  இருக்கும்.

இந்த     பரிசோதனை தற்காலிகமாக தொண்டைப் பகுதியை  மரத்துப்போக போக செய்யும்    மருந்து கொண்டும்  செய்யலாம். அந்த மருந்தானது  சற்றே கசப்பாக இருக்கும் அல்லது  சற்று  எரிச்சலோடு இருக்கும்.  அடுத்த 30 நொடிக்குள்  தொண்டை பகுதி    மதமதப்பு/  உணர்வின்றி  ஆகிவிடும். தாங்கள்  அகற்றக் கூடிய செயற்கை பல் செட் வைத்திருப்பின்    அதை  முன்னதாகவே  அகற்ற வேண்டும். சிரை வழியாக  உணர்வு மயக்கம்  செலுத்தியும்  செய்து கொள்ளலாம்.   உணர்வு மயக்கம் செலுத்தி  செய்யும் பரிசோதனையின் போது  தங்களுக்கு   மூக்கின் வழியாக  குழாய் மூலம்  சுவாசக் காற்று செலுத்தப்படும். உணர்வு மயக்கம் செலுத்தி  செய்யும்  பரிசோதனையின் போது  தங்களின்  ரத்த அழுத்தம்  மற்றும்  சுவாசக் காற்றின் அளவு  தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

இந்த பரிசோதனை என்பது  மூன்று முதல்  ஐந்து நிமிடங்கள் வரை  எடுத்துக் கொள்ளும்.  உணர்வு மயக்கம் செலுத்தினால்  கண் விழிக்க  ஒரு மணி நேரம் வரை ஆகலாம்.  இந்த பரிசோதனை  செய்து கொள்ளும்போது  மூச்சு விட  எந்த சிரமமும் இருக்காது,   எப்பொழுதும் போல்  மூக்கு வழியாக  இயல்பாக  சுவாசிக்கலாம். இந்த பரிசோதனைக்கு  வருமுன்  ஆறு மணி நேரம் வரை  ஆகாரம் மற்றும் தண்ணீர் அருந்தக்கூடாது.

இந்த பரிசோதனை  உணவு உட்கொள்ள  சிரமம் உள்ளவர்கள்  அல்லது  திட உணவு  உட்கொள்ள சிரமம் உள்ளவர்கள்,  நாள்பட்ட  நெஞ்சு எரிச்சல் உள்ளவர்கள்,  தொடரும் வாந்தி  உள்ளவர்கள்,   ரத்த வாந்தி உள்ளவர்கள்,   கருப்பு நிற  மலம்  கழிப்பவர்கள்,   நாள்பட்ட  பசி  இல்லாதவர்கள்,   கணிசனமான  காரணம் இன்றி  எடை குறைபவர்கள்,  நாள்பட்ட  மேல் வயிற்று வலி உள்ளவர்கள்,  ரத்த சோகை உள்ளவர்கள்,   மேல் வயிற்றில்  சிறிய  கட்டி போல்  உணர்வு கொண்டவர்கள் கட்டாயம் மருத்துவரின் ஆலோசனையுடன் செய்து கொள்ள வேண்டும்.

இந்த பரிசோதனை, தங்களை  ஒருக்களித்து  இடது பக்கமாக  படுக்க வைத்து    செய்யப்படும்.   இதன் மூலம்  சுரக்கும் உமிழ்நீரானது   மூச்சுக் குழாய்க்குள்  செல்லாமல் இருக்க  ஏதுவாக இருக்கும்.    சில நேரம் தங்களை  உங்கள் மருத்துவர்  பரிசோதனையின் போது தங்களை எச்சில்  விழுங்குமாறு  செய்ய கட்டளையிடுவார்.   அதன் பின்னர்  தாங்கள்  எப்பொழுதும் போல  நிதானமாக  சுவாசிக்கலாம்.  இந்த பரிசோதனையின் போது  உமிழ்நீர் சுரந்தால்  அதனை விழுங்க  முயற்சி செய்யக் கூடாது  அதை அப்படியே  விட்டு விட வேண்டும்.  இறுதியில்  அதனை  திடமான காகிதம் மூலமாகவோ  கைக்குட்டை மூலமாகவோ  சுத்தம் செய்து கொள்ளலாம்.  இந்த பரிசோதனை முடிந்த பின்  தங்களின்  தொண்டைப் பகுதியானது  உணர்வின்றி/மதமதப்புடன்   இருக்கும்.   அதனால்  அச்சம் கொள்ள தேவையில்லை.  சிறிது நேரத்தில்  உணர்வு பெற்று விடும்.

இந்த பரிசோதனையின் போது  அசாதாரணமாக  தெரியும்  திசுக்கள்  பரிசோதனைக்கு    எடுக்கப்படலாம்.   இதனால்  எந்த வகையான  வலியும் ஏற்படாது.   தற்போதுள்ள  உபகரண  சிகிச்சை முன்னேற்றத்தினால் அறுவை   சிகிச்சைகள்  தவிர்க்கப்பட்டு  குடல் உள்நோக்கு கருவி மூலமே  தீர்வு காணப்படுகிறது.  எனவே  எந்த வயதினரும்  தக்க உடல் தகுதி பரிசோதனைக்கு பின் குடல் உள்நோக்கு பரிசோதனையை  அச்சமின்றி மேற்கொள்ளலாம்.

Dr. S. Vadivel Kumaran

Dr. S. Vadivel Kumaran
Consultant Medical Gastroenterologist & Hepatologist
Kauvery Hospital Chennai

Kauvery Hospital