காவேரியின் பசுமை புரட்சி

என்னை சுவாசித்து உயிர்வாழும் மனிதனே,

என்னை அழிக்கத் துடிப்பது ஏன்.

 

என்னை அழித்தால் உங்கள் சந்ததி அழியும் என்று,

அறியா மானிடனே.

 

எங்களை வளர்த்த உங்கள் பாட்டன் மறைந்தாலும்,

உங்களுக்கு இன்றும் பலன் தருகிறேன்.

 

நான் அழிந்தால் உங்கள் சந்ததியும் அழியும்,

உங்கள் பிள்ளை போல் எங்களை வளர்த்தால்,

பூமி வெப்பம் ஆகாது,

மழை பெய்து பூமியே வளம் பெறும்.

 

பூமி வளம் பெற்றால் ஜீவராசிகள் அனைத்தும் வளம் பெறும்.

 

ஐந்தறிவு ஜீவராசிகளான பறவைகளும், விலங்குகளும், எங்களை வளர்த்து,

உலகின் எல்லா ஜீவராசிகளும் சுவாசிக்க உதவுகிறது.

 

ஆனால் ஆறறிவு ஜீவன் என்று சொல்லிக்கொண்ட நீ,

என்னை அழிக்கத் துடிக்கிறாய்.

 

மானுடனே சுதாரித்துக்கொள்.

 

பூமி வெப்பமயமாவதை தடுக்க,

மழை பெற, உங்களுக்கு உணவு அளிக்க,

நீங்கள் சுவாசிக்க எங்களை வாழவிடு, வளர்த்துவிடு.

 

அழிக்க நினைக்காதே,

நீயும் அழிவாய்.

 

எங்கள் வித்துக்களை பந்துகளாக்கி காவேரி மருத்துவமனை வைத்துள்ளது,

நல்லுள்ளம் கொண்டோர் விதைப்பந்துகளை வாங்கி நினைத்த இடத்தில் வீசுங்கள்.

 

வீசப்பட்ட நான் உங்கள் தலைமுறை கடந்தும்,

இந்த பூமியையும், ஜீவன்களையும் செழிக்க செய்வேன்.

 

– இப்படிக்கு மரம்…..

 

GK. Balasubramani
GK. Balasubramani
Senior Physiotherapist

Kauvery Hospital