உனக்காக நீ

உருவம் உன்னுடையது

உருவகப்படுத்துதல் உன்னை பொருத்தது

உன் நிழல் கூட உன்னைத்தான் தொடர்கிறது உணர்வாய் உன் வலிமையை

நீ உன் திறன் அறிந்து கொள்

நீ உன் திறமை அறிந்து கொள்

நீ உன் செயல்பாட்டை அறிந்து கொள்

முடிவில் நீ உனக்கானதை அறிந்து கொள்

உனக்காக நீ மட்டும் தான் இருக்கிறாய் என கர்வம் கொள்

உன் பேச்சு உன்னோடு‌ தான்

உன் விருப்பம் உன்னோடு தான்

உன் எதிர்பார்ப்பு உன்னோடு தான்

உன் எதிர்வினை உன்னோடு தான்

உன் கண்ணீரும் உன்னோடு தான்

நீயே உன்னை உத்வேகப்படுத்து

அங்கீகாரத்திற்காக‌ காத்திருக்காதே அங்கீகாரம் கொடுக்கிற வராக மாறு

உனக்காக காலம் காத்து கொண்டிருக்கிறது

உன்‌ வெற்றியின் அழகை காண

நீயே உனக்கான‌ அழகு

நீயே உனக்கான‌ தைரியம்

நீயே உனக்கான‌ மந்திரம்

நீயே உனக்கான சிறப்பு

உன் சிந்தனையே உனக்கான வலிமை

நீ வாழ வழி தேடுகிறாய் வாழ்வோ உன்னை தேடுகிறது

நீ மற்றவரை பிரதிபலிக்காதே அவர்கள் வாழ்வியல் வேறு

சற்று யோசித்து பார்

நீயில்லாமல் நிழலும் இல்லை நிஜமும் இல்லை

உனக்காக நீ மட்டும் தான்

 

M. Vasanth David Benaya
System Administrator-EDP

Kauvery Hospital