குழந்தையின் இதயத்தில் ஏற்பட்ட துளையை சைனஸ் வெனோசஸ் ஏஎஸ்டி சாதனம் மூலமாக அடைத்து திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
இதயத்தில் குறைபாடுகளுடன் (துளைகள்) பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல. இதயத்தில் உள்ள பெரும்பாலான குறைபாடுகள் இப்போது அறுவை சிகிச்சையின்றி சரிசெய்யப்படுகிறது.
இதய குறைபாடு (சைனஸ் வெனோசஸ் ஏஎஸ்டி) எப்போதும் திறந்த இதய அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே மூடப்படும்.
இருதய சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ஜோசப் தியோடோர் (முன்னணி எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட் மற்றும் இன்டர்வென்ஷனல் கார்டியலஜிஸ்ட்) மற்றும் டாக்டர்.மணிராம் கிருஷ்ணா (குழந்தை மருத்துவ இருதயநோய் நிபுணர்) ஆகியோர் சைனஸ் வெனஸ் குறைபாட்டை அறுவை சிகிச்சையின்றி ஒரு சாதனம் மூலம் வெற்றிகரமாக சரிசெய்தனர்.
இதய குறைபாடு உள்ள 24 வயது பெண் ஒருவருக்கு இந்த செயல்முறை செய்யப்பட்டது, அவர் மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
காவேரி ஹார்ட்சிட்டியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் டி செந்தில் குமார் கூறுகையில், “திருச்சியில் உள்ள காவேரி ஹார்ட்சிட்டி இந்த வகையான சிக்கலான இருதய சிகிச்சைக்கு முன்னோடியாக திகழ்கிறது” என்று தெரிவித்தார்.
உலகெங்கிலும் 100 க்கும் மேற்பட்ட சைனஸ் வெனோசஸ் குறைபாடுகளுடைய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நோயாளி, அவர்களில் ஒருவர் என்றும் திருச்சியில் இதுதான் முதல் முறை என்றும் அவர் கூறினார்.