அவள் ஓர் அறிவியல்

டயாலிசிஸ் என்னும் இயத்திரம்

 

இறைவனின் கைபிடியில் இருந்த மனிதன்

இன்று உன் அரவணைப்பிலும் வாழ்கின்றான்.

உடல் பரமரிப்பின்மை உணவில் நச்சுகளின் ஆதிக்கம்

இவ்வளவு நச்சுகளையும் நான் எப்படி வெளியேற்ற என்று

உன் நண்பனாம் கிட்னி ஒதுங்கிவிட

உன்னை அரவணைத்து கொண்டது இவ்வுலகம்

இரண்டு நிமிடம் இமைக்காமல் இருக்கவே முடியாது என்பது போல்

டயாலிசிஸ் என்னும் இயந்திரமாகிய நீ இல்லாமல் இருக்கவே முடியாது என்றாகிவிட்டது உன்னை. சார்ந்துள்ள மனிதர்களுக்கு

பல பரிணம வளர்ச்சியை கண்டாலும் பண்புடன் உயிர் கொடுக்கிறாய்.

பம்பரமாய் நீ சுற்ற, உன்னை பக்குவமாய் கையாருகிறோம் நாங்கள்.

உன் கண்சிமிட்டலால் எங்களை கட்டி போட்டாய் (அலாரம்)

உன் கை அசைவினால் எங்களை கைது செய்தாய் (இரத்த அழுத்தம்)

அறிவியலும் அழகு தான் என்று உன்னை கண்டபின் உணந்தோம்

சிக்கலான சிகிச்சையிலும் சிறப்பாக பணிசெய்து வாழ்வை நீடிக்க செய்கிறாய்

வழக்கை என்னும் காகிதத்தில்

முயற்சி என்னும் தேடலில்

நம்பிக்கை என்னும் உருவமாய் நீ தெரிகிறாய்.

அறிவியலின் அரவணைப்பா நீ!!!!!

சுகமானதா?

சுமையானதா?

வரமா?

விடை தேட

வேண்டிய வாழ்வின்

இன்றைய தலைமுறை நாம்

சிந்திப்போம் செயல் படுவோம்

 

அன்புடன்
ஜெஸ்டல் ஹென்சி. ஜெ

Kauvery Hospital