மனமும் வெற்றியின் ரகசியமும்

பிறக்கும்போது மனிதன்,

மனம் இல்லாமல் பிறக்கிறான்.

பார்த்து, கேட்டு, நுகர்ந்து, சுவைத்து, தொடு உணர்வு போன்ற உணர்வுகளை ஐம்புலன்கள் மூலம் கிரகித்து, மனம் உருவாகிறது.

மனம் என்பது,

எண்ணங்களின் தொகுப்பு,

எண்ணங்கள் தனித்தனியானவை.

மனம், ஒரு தொடர்பின் மூலம்

எண்ணங்களை நகர்த்தி செல்கிறது.

அறிவு என்பது,

ஐம்புலன்களின் மூலம் கிடைப்பது.

அறிவு என்பது,

அடுத்தவர்களின் அனுபவமும், எண்ணம் பிரதிபலிப்புமே.

அறிவு என்பது,

ஒரு நம்பிக்கை மட்டுமே, அனுபவமாகாது.

புரிதல் என்பது,

மனிதனுக்கு தகுந்தார் போல் மாறுபடும்.

அனுபவம் என்பது,

தன்னுடைய புரிதலும் தகுந்தார் போல் மாறுபடும்.

உண்மையான புரிதலே தெளிவு,

அந்த தெளிவே அனுபவம்.

வாழ்வில் வெற்றி பெற,

உண்மையான அனுபவம் முக்கியம்.

அலைபாயும் மனதின் வேகத்தை அடக்கி,

எண்ணங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை உணர்வது தான் தியானம்.

தியானத்தின் மூலம்தான்,

துறையில் நிபுணத்துவம் பெற முடியும்.

மனம் அதிகமாக சிந்திக்கும்போது,

சுய உணர்வு குறையும்.

சுய உணர்வு அதிகமாகும் போது, மனம் ஒடுங்கும்.

சுய உணர்வோடு செயல்படும்போது,

இலக்கை தெளிவாக அடையலாம்.

இதுவே வெற்றியின் வழி.

 

GK. Balasubramani

GK. Balasubramani
Senior Physiotherapist

Kauvery Hospital