சிதைவுள்ள வால்வு செயலிழப்பு மற்றும் இடுப்பெலும்பு முறிவால் அவதியுற்ற 75 வயதான விவசாயிக்கு நடமாட்டத்திறனை திரும்பவும் வழங்கிய நுட்பமான ஹைபிரிட் சிகிச்சை செயல்முறைகள்

அதிக இடர்வாய்ப்புள்ள நபர்களுக்கு சிக்கலான செயல்முறைகளை மேற்கொள்வதற்கு மிகவும் பாதுகாப்பான கட்டமைப்பான ஹைபிரிட் அறுவைசிகிச்சை அரங்கில் ஒரே கட்டத்தில் 3 மணி நேரத்திற்குள் இம்மருத்துவ செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டன  

சென்னை: நவம்பர் 2024: மேம்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக பிரபலமாக அறியப்படும் காவேரி மருத்துவமனை, தமிழ்நாட்டின் மயிலாடுதுறையைச் சேர்ந்த 75 வயதான ஒரு முதிய நோயாளிக்கு இரு மருத்துவ செயல்முறைகளை ஒரே நேரத்தில் வெற்றிகரமாக மேற்கொண்டதன் வழியாக மற்றுமொரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. ஆசிரியராகவும், விவசாயியாகவும் முன்பு பணியாற்றிய இவர், அவரது நடமாட்டத் திறனை மற்றும் தனித்து இயங்கும் சுதந்திரத்தை மீண்டும் பெறுவதற்கான இந்த மருத்துவ பயணத்தில் நம்பிக்கையையும், திடகாத்திர மனதையும் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

2008-ம் ஆண்டில் பயோப்ரோஸ்தெடிக் வால்வு வழியாக மிட்ரல் தடுக்கிதழ் மாற்றுச்சிகிச்சை இந்நோயாளிக்கு செய்யப்பட்டிருந்தது.  சமீபத்தில் எடுக்கப்பட்ட எக்கோ சோதனை, அந்த செயற்கை வால்வு சிதைவடைந்திருப்பதையும், கடுமையாக குறுகியிருப்பதையும் வெளிப்படுத்தியது. அத்துடன், வலது இதயத்தில் மிக அதிக (கடுமையான நுரையீரல் மிகை இரத்தஅழுத்தம்) என்ற பிரச்சனையும் இவருக்கு இருந்தது.  இந்த வால்வை மாற்றுவதற்காக இரண்டாவது அறுவைசிகிச்சையை செய்வது, இவரது முதுமை மற்றும் உடல்நிலையின் காரணமாக அதிக ஆபத்தானதாக இருந்ததால், அறுவைசிகிச்சையின்றி டிரான்ஸ்கதீட்டர் மிட்ரல் ViV மாற்று சிகிச்சையை நவம்பர் மாத இறுதியில் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.  எனினும், எதிர்பாராத விதமாக வீட்டில் கீழே விழுந்ததனால், இடதுகாலில் தொடை எலும்பின் கழுத்துப் பகுதியில் (உடைந்த இடுப்பெலும்பு) எலும்பு முறிவு ஏற்பட்டது இவரது நிலையை சிக்கலாக்கியது.

இவரது இடுப்பெலும்பு முறிவுக்கும் இதய பாதிப்பின் ஆபத்தான நிலைக்கும் தீர்வு காண்பது பெரிய சவாலை ஏற்படுத்தியது.  பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவைப்படுகின்ற ஒரு அதிக ஆபத்தான மருத்துவ செயல்முறையாக இவை இருந்தது.  இடுப்பெலும்பு மற்றும் இதயம் சார்ந்த இரு மருத்துவ செயல்முறைகளையும் ஒரே பொது மயக்க மருந்து (அனஸ்தீசியா) வழங்கலின் கீழ் மேற்கொள்வதே ஒரே பாதுகாப்பான வழியாக இருந்தது.  ஹைபிரிட் (கலவை), கேத்லேப் அறுவைசிகிச்சை அறையில் முதலில் டிரான்ஸ்கதீட்டர் மிட்ரல் ViV செயல்முறையையும் மற்றும் அதைத் தொடர்ந்து இடதுபுற முழு இடுப்பெலும்பு மாற்று சிகிச்சையையும் செய்வதென செய்யப்பட்டது.  இத்தகைய வசதியும், திறனும் இந்தியாவில் வெகுசில மருத்துவ மையங்களில் மட்டுமே கிடைக்கிறது.  ஹைபிரிட் கேத்லேப் அறுவைசிகிச்சை அறை, இதய மற்றும் எலும்பியல் சிகிச்சையில் சிறந்த நிபுணத்துவம்  இம்மருத்துவமனையில் இருப்பதால், இம்முதிய நோயாளிக்கு இம்மருத்துவ செயல்முறைகள் பாதுகாப்பாக செய்யப்பட்டன.  இச்சிகிச்சைகள் முடிவடைந்து, 36 மணி நேரங்களுக்குள் இவர் இயல்புநிலைக்கு திரும்பினார்.

“இடுப்புக்கூடு வழியாக மேற்கொள்ளப்பட்ட டிரான்ஸ்கதீட்டர் மிட்ரல் வால்வு – இன் – வால்வு செயல்முறை, குறைந்த ஊடுருவல் கொண்ட இந்த நவீன உத்தியைப் பயன்படுத்தி, இந்நோயாளிக்கு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. குறைந்த ஊடுருவல் உள்ள இந்த உத்தி, அவரது வலதுபக்க இதய அழுத்தத்தை 103-லிருந்து 60 ஆக உடனடியாக குறைத்து,  மிட்ரல் தடுக்கிதழ் வால்வு மீண்டும் இயல்பாக செயல்படத் தொடங்கியது.  இவரது இதய பாதிப்புநிலை சரிசெய்யப்பட்டவுடன், எலும்பியல் துறை மருத்துவர்களது குழு, அதே அறுவைசிகிச்சை அறையின் அதே அறுவைசிகிச்சை மேஜை மீதே அவருக்கு இடுப்பெலும்பு மாற்று அறுவைசிகிச்சையை மேற்கொண்டது.” என்று சென்னை காவேரி மருத்துவமனையின் முதுநிலை இடையீட்டு இதயவியல் நிபுணர் டாக்டர். அனந்தராமன் கூறினார்.

இம்மருத்துவ செயல்முறைகள், சிறப்பான வெற்றியுடன் நல்ல சிகிச்சை விளைவுகளை வழங்கியிருக்கின்றன.  இச்செயல்முறைகள் முடிவடைந்ததிலிருந்து 36 மணி நேரங்களுக்குள் செயற்கை சுவாச சாதன இணைப்பு அகற்றப்பட்டது மற்றும் இயல்புநிலைக்கு அவர் திரும்பினார்.  இவரது துரிதமான மீட்சி, அவரது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்லவும் மற்றும் அவரது சுறுசுறுப்பான செயல்பாடுகளை வழக்கம்போல் மேற்கொள்ளவும் ஏதுவாக்கியிருக்கிறது.

“பல உடல்நலச் சிக்கல்கள் இருக்கும் நோயாளிகளுக்கு கூட, அறுவைசிகிச்சை உத்திகளில் நிகழ்ந்துள்ள புதிய முன்னேற்றங்கள், சிகிச்சைகளை அதிக பாதுகாப்பானதாக மாற்றியிருக்கின்றன.  இந்நோயாளிக்கு ட்யூவல் மொபிலிட்டி இடுப்பெலும்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், இடுப்பெலும்பு அதிக ஆண்டுகள் செயல்படும்; எதிர்காலத்தில் சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புகளையும் இது குறைத்திருக்கிறது.  ஒரு விவசாயியாக அறுவடைப் பருவத்திற்கு முன்னதாகவே தயாராகவும் மற்றும் சிறப்பான நடமாட்டத்திறன் வேண்டுமென்றும் அவர் விரும்பினார்.  ஆகையால் டூயூவல்  மொபிலிட்டி செயல்முறை வழியாகவே இதை அடையமுடியும் என்பதால், இந்த உத்தி இந்நோயாளிக்கு செயல்படுத்தப்பட்டிருக்கிறது.” என்று ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையின் எலும்பியல் துறை முதுநிலை நிபுணர் டாக்டர். K. முகுந்த் கூறினார்.

“பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த சிறப்பான சிகிச்சைக்கு இந்த நேர்வு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாகும்.  சிக்கலான இதய சிகிச்சை மற்றும் எலும்பியல் செயல்முறைகளை ஒரே அமர்வில் மேற்கொள்வதற்கான ஒருங்கிணைப்பு, இந்நோயாளியின் மருத்துவ தேவைகளுக்கு தீர்வை வழங்கியிருக்கிறது; அத்துடன், வேகமாக குணமடைந்து இயல்புநிலைக்கு திரும்புவதை உறுதி செய்திருக்கிறது.  எமது நவீன, ஹைபிரிட் அறுவைசிகிச்சை அறை, உயிரை காக்கக்கூடிய இத்தகைய மருத்துவ செயல்முறைகளை சிரமமின்றி எளிதாக மேற்கொள்ளவும், அதன்மூலம் புதுப்பிக்கப்பட்ட பலத்தோடு அவரது இயல்பு வாழ்க்கைக்கு நோயாளி திரும்புவதையும் சாத்தியமாக்கியிருக்கிறது.” என்று  காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறினார்.

Kauvery Hospital